700 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன்.. என் மனதை கவர்ந்த கதாபாத்திரம் இதுதான் – நாசர்

Nasser : 80, 90 காலகட்டங்களில் வில்லனாக ஜொலித்த நாசர் தற்பொழுது வயது முதிர்வின் காரணமாக டாப் ஹீரோக்களின் படங்களில் முக்கிய மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பேரையும் புகழையும் சம்பாதித்து வருகிறார். இவர் சினிமாவில் வருவதற்கு முக்கிய காரணம்..

ஒரு சில நடிகர்கள் அவர்களின் முக்கியமானவர். கமலஹாசன் நாசரின் நடிப்பு திறமையை நன்கு கவனித்துக் கொண்டிருந்த அவர் பின் தன் படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை கொடுத்து விடுவாராம் அப்படித்தான் நாயகன் மற்றும் ஒரு சில படங்களில் அவரை நடிக்க வைத்து உள்ளார்.

அஜித்தின் உண்மை முகம் வெளிவந்தது.. ரசிகர்களுக்கு அட்வைஸ்

அதன் பிறகு நாசர் பெரிய அளவில் பட வாய்ப்புகளை அள்ளினார் எனவும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நாசர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அவர் கூறியது.. நான் இதுவரை 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன். ஆனால் என் மனதுக்கு நெருக்கமான கதாபாத்திரம் என்றால்..

அது எம்மகன் படத்தில் வரும் தந்தை கதாபாத்திரம் தான் மற்ற படங்களில் நான் நடிக்கும் பொழுது என்னை தொடர்பு கொள்ளும் ரசிகர்கள் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என கூறுவார்கள் ஆனால் எம்மகன் படத்தில் நடித்ததற்கு என்னை தொடர்பு கொண்டவர்கள் அவர்கள் தந்தையை நான் ஞாபகப்படுத்தி இருப்பதாக கூறினார்கள்.

பைசா வசூல் அல்ல போகும் கேப்டன் மில்லர்..! படத்தைப் பார்த்தவர்களின் முதல் விமர்சனம்.!

இது நடிப்பிற்கு கிடைக்கும் பாராட்டை விட பெரிய விஷயமாக பார்க்கிறேன். இதற்கு முழுக்க முழுக்க காரணம் அந்த இயக்குனர் தான் அவர்தான் இந்த கதாபாத்திரம் இப்படி அமைய வேண்டும் என வடிவமைத்தார் என கூறினார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கி வருகிறது.