லியோ படத்தால எங்கள கசக்கி புழிஞ்சிட்டாங்க.. 70- 80% கேட்டா எப்படி? தியேட்டர் உரிமையாளர்கள் வேதனை

Leo Movie: லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப் போட்டு வரும் நிலையில் சமீபத்தில் தியேட்டர் உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் இது குறித்து பேட்டி அளித்துள்ளார். அதாவது திருப்பூர் சுப்ரமணியிடம் லியோ படம் உண்மையாகவே லாபகரமான படமா? இல்லை நஷ்டம் ஏற்படுத்தியதா என கேள்வி எழுப்ப இதுகுறித்து அவர் கூறியது பற்றி பார்க்கலாம்.

திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது, கஷ்டத்துக்கு வாய்ப்பே கிடையாது நாங்க என்ன விலை கொடுத்தா படம் போடுறோம் அதெல்லாம் நஷ்டம் கிடையாது அந்த படத்தோட வசூல் என்ன ஆனாலும் எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தான் பணம் வரும். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் 60% அதிகமாக இருந்தது. திருப்பி கமல், ரஜினி வந்த பிறகு 65% இருந்தது, விஜய், அஜித் வந்த பிறகு 70% ஆக மாறுச்சி.

இது எங்க மாறுச்சுனா மாஸ்டர் படத்துல நாங்களே மாற்றினோம் மாஸ்டர் படம் கொரோனாவிற்கு பிறகு அந்த பெரிய படமாக இருந்துச்சு தயாரிப்பாளரும் நிறைய செலவு செய்து பண்ணி இருக்காங்க ஓடிடி போகாம நேரடியா தியேட்டருக்கு வந்துச்சு இதுல வேற அன்னைக்கு கவர்மெண்ட் 60% வச்சது.

38 வயசுலயும் டார்கெட் பண்ணி அடித்த அசின்.! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

இப்படி இருக்கும் பொழுது அவங்களுக்கும் கட்டுப்படியாகாது என்பதற்காக 75% – 80% பங்கு கொடுத்தோம் அப்பொழுது சொல்லி தான் கொடுத்தோம் இது இப்போதைக்கு தான் அடுத்த முறை இதுபோன்று கேட்காதீங்க எங்களுக்கு கட்டுப்படியாகாது அதிகபட்சம் 70% தான் கொடுக்க முடியும் என்று சொல்லியிருந்தோம். அதேபோல தான் பீஸ்ட், வாரிசு போன்ற படங்களுக்கும் 70% தான் கொடுத்தோம்.

ஆனால் இந்த படத்தோட தயாரிப்பாளர் 75% கேட்டாரு நாங்க சொன்னோம் பீஸ்ட், வலிமை, துணிவு, வாரிசு, ஜெயிலர் எல்லா படத்துக்கும் 65% – 70% தான் கொடுத்தோம். இப்படி இருக்கும் பொழுது நீங்க வந்து திடீரென்று 75% கேட்டா எப்படி சார் எங்களுக்கு கட்டுப்படி ஆகும் என்று கேட்டோம் அதற்கு நாங்க ஒன்னும் பண்ண முடியாது வேணும்னா போடுங்க வேணாம் என்றால் விட்டுடுங்க என்ன சொல்லிட்டாரு எங்களுக்கு வேற வழி கிடையாது தீபாவளி வரைக்கும் வேற படம் இல்லை தீபாவளி வரைக்கும் தியேட்டரை பூட்டியா வைத்திருக்க முடியும்?

500 கோடி, 1000 கோடி என்று உருட்டுனதெல்லாம் போதும்… லியோ வசூல் இவ்வளவுதான்… தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

எனவே வேறு வழியில்லாமல் தான் லியோ படத்தை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார். பொதுவாக ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களை ரிலீஸ் செய்யும் போதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக போடுவோம் ஏனென்றால் அது எல்லாம் நல்ல வசூலை கொடுக்கும் படம் என்று ஆனால் இது எல்லாத்தையும் லியோ படத்துல பொய்யாகிப் போயிடுச்சு ஏனென்றால் அவ்வளவு தூரம் கசக்கி புழிஞ்சிட்டாங்க கடைசி நாள் வரையும் இழுத்து புடிச்சி பிறகு வேறு வழி இல்லாம தான் லியோ படம் தியேட்டர்களில் ரிலீசானது. எனவே இந்த மாதிரி பண்ணி திரையரங்குகளின் உரிமையாளர்கள் பொருத்தவரை பெரிய சந்தோஷமாக கொண்டாடும் படமாக நினைக்கவே முடியாது என வருத்தத்துடன் கூறியுள்ளார்.