500 கோடி, 1000 கோடி என்று உருட்டுனதெல்லாம் போதும்… லியோ வசூல் இவ்வளவுதான்… தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

Leo Box Office: விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடைப் போட்டு வரும் லியோ திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 19ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் தற்பொழுது வரையிலும் ஓடிக் கொண்டிருக்கும் லியோ சுமார் 500 கோடியை கடந்து விட்டதாக கூறப்பட்டது.

மேலும் தமிழகத்தில் இதுவரையிலும் 200 கோடி வசூல் செய்திருப்பதாகவும் அதோடு மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நல்ல வசூல் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியானது. எனவே விரைவில் ஜெயிலர் பட வசூல் சாதனையை முறியடிக்கும் என மிகுந்த ஆர்வமுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

சமீபத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் லியோ படம் லாபம் இல்லை என கூறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. லியோ படத்தின் ரிலீசாக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்த வந்தனர். ஆனால் லியோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவே இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கும் தயாரிப்பு நிறுவனம் லியோ படத்தின் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் லியோ ரூ.461 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் இன்னும் லியோ 500 கோடி வசூலை கூட எட்டவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. எனவே ரஜினியின் ஜெயிலர் பட சாதனையை தற்பொழுது வரையிலும் முறியடிக்க வில்லை என்பதால் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இருந்தாலும் உலகம் முழுவதும் லியோ திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் ரூ.461 கோடி வசூல் செய்திருக்கும் நிலையில் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்து லியோ திரைப்படம் சாதனை படைத்திருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.