38 வயசுலயும் டார்கெட் பண்ணி அடித்த அசின்.! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

Actress Asin Net worth: ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக சினிமாவில் கலக்கி வந்த நடிகை அசின் தற்பொழுது திருமணம் செய்துக் கொண்டு குழந்தை குட்டி என்று குடும்பத்துடன் செட்டிலான நிலையில் இன்று தன்னுடைய 38வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். 38வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை அசின் எவ்வளவு சொத்து வைத்துள்ளார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்த இவருக்கு பாலிவுட்டிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தது. அப்படி தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

500 கோடி, 1000 கோடி என்று உருட்டுனதெல்லாம் போதும்… லியோ வசூல் இவ்வளவுதான்… தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி தனது கணவரின் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். இவ்வாறு நடிகை அசின் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் இவர் குறித்த சில சர்ச்சைக்குரிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகுவது வழக்கம். அப்படி சமீபத்தில் அசின் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார் என்றும் தற்பொழுது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் செய்திகள் வைரலானது.

எனவே இதனைப் பார்த்து கடுப்பான அசின் தனது கணவர், குழந்தை உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பல நடிகைகள் சினிமாவில் நடித்து வந்தாலும் பணக்கார நபராக இருந்தால் உடனே அந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டவர்கள் பலர் இருக்கின்றனர்.

Ethirneechal : நீயா நானான்னு திமிறிகிட்டு வந்து நிற்பான் குணசேகரன்.! உன்ன உள்ள தூக்கி வைக்கணுமா ஜான்சியை மிரட்டும் அப்பத்தா.!

அப்படித்தான் அசினும் பணக்கார பையனாக பார்த்து வளைத்து போட்டார் இவருடைய சொத்து மதிப்பு மட்டும் 117 கோடி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அனைத்து சொத்துக்களும் அசின் தன்னுடைய சொந்த உழைப்பினால் சம்பாதித்ததாம். அதோடு மட்டுமல்லாமல் பென்ஸ், ஆடி உள்ளிட்ட ஏராளமான கார்களையும், கேரளாவில் பண்ணை வீடு, ஆடம்பர பங்களா என ஏகப்பட்ட சொத்துக்கள் வைத்திருக்கிறாராம். இவருடைய கணவருடைய சொத்து மதிப்பு இன்னும் பல கோடி இருப்பதாகவும் கூறப்படுகிறது.