பணத்தில் புரளும் பணக்கார தமிழ் சினிமா நடிகர்கள்.! லிஸ்டில் இடம் பிடித்த ரஜினி, அஜித், விஜய்.?

Tamil Actors: தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், விஜய் என ஒவ்வொரு நடிகரும் தான் நடிக்கும் ஒரு படத்திற்காக ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளங்களை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் இவர்கள் யாருமே தமிழ் சினிமாவில் பணக்காரன் நடிகர்கள் கிடையாது என கூறப்படுகிறது. பாகுபலி படத்தில் கிடைத்த வரவேற்பினால் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பான் இந்திய படமாக தயாராகி வருகிறது.

அந்த வகையில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா 30க்கு அதிகமான மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது இதன் மூலம் கிடைக்கும் வரவேற்பினால் நடிகர்களுக்கு அதிக அளவில் சம்பளம் தரப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சமீப காலங்களாக ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

எனக்கு பீரியட்ஸ் நேரத்தில் தான் அந்த இயக்குனர்.? உண்மையை உடைத்த அஞ்சலி..

அப்படி கமலின் விக்ரம் திரைப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது அதேபோல் ரஜினியின் ஜெயிலர், விஜய்யின் லியோ போன்ற படங்களும் ரூ.200 கோடி வசூலை எட்டியது. இவ்வாறு ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் ரூ.100 கோடிக்கும் அதிகமான சம்பளத்தை பெற்று வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் பணக்கார நடிகராக கமல்ஹாசன் இருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தற்பொழுது கமல்ஹாசனிடம் ரூபாய் 450 கோடிக்கு சொத்து இருக்கிறதாம் இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் மற்ற நடிகர்களை விட அதிகம் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு இந்த நிறுவனத்தையும் சேர்த்து 570 கோடிக்கு சொத்து இருக்கிறதாம்.

இதுதான் விஜய்யின் சூரியவம்சம் வர்ஷன்.. என்னைய புள்ளையா பெத்ததுக்கு எங்க அப்பா தான் தவம் பண்ணிருக்கணும்…

இவரை அடுத்து ரஜினியின் சொத்து மதிப்பு ரூபாய் 450 கோடியாம், விஜய்யின் சொத்து மதிப்பு ரூபாய் 410 கோடியாகவும், இவர்களை தொடர்ந்து அஜித்திடம் ரூ.350 கோடி, சூர்யாவிடம் ரூபாய் 300 கோடி, கார்த்தியிடம் ரூபாய் 110 கோடி, தனுஷிடம் ரூபாய் 160 கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்