இதுதான் விஜய்யின் சூரியவம்சம் வர்ஷன்.. என்னைய புள்ளையா பெத்ததுக்கு எங்க அப்பா தான் தவம் பண்ணிருக்கணும்…

Thalapathy Vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை அறிவித்திருக்கும் நிலையில் தொடர்ந்து மக்கள் பாராட்டுகளையும் அதையும் மிஞ்சும் அளவிற்கு விமர்சனங்களையும் குவித்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து பொதுமக்களிடம் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துக்களையும் கேட்டு வருகின்றனர்.

ரசிகர்களும் முதல்வன் பட காட்சிகளை வைத்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவை சோசியல் மீடியாவில் தெறிக்க விட்டு வருகிறார்கள். இந்நிலையில் அதேபோன்ற மற்றொரு வீடியோ இணையவாசிகளை சிரிக்க வைத்துள்ளது. கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சினிமாவில் கூட இருந்தவர்களை தம்பியாக நினைத்து வளர்த்து விட்டு அழகு பார்த்த 5 பிரபலங்கள்.. நன்றி மறந்த சிவகார்த்திகேயன்..

இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மேலும் ஒரு படத்தில் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளார். இவ்வாறு படப்பிடிப்புகள் முடிந்தவுடன் முழுவதுமாக அரசியலில் ஈடுபட உள்ளார்.

தற்பொழுது சூரிய வம்சம் படத்தில் சரத்குமாருக்கு பதில் விஜய்யும், எஸ்.ஜே சந்திரசேகரம், ராதிகாவுக்கு பதிலாக விஜய்யின் அம்மா சோபாவும், தேவயானிக்கு பதிலாக விஜய்யின் மனைவி சங்கீதாவின் முகத்தையும் வைத்து ஏஐ வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகிறார்கள்.

சினிமாவில் கூட இருந்தவர்களை தம்பியாக நினைத்து வளர்த்து விட்டு அழகு பார்த்த 5 பிரபலங்கள்.. நன்றி மறந்த சிவகார்த்திகேயன்..

அதில் விஜய்க்கு ஏற்றவாறு சூரியவம்சம் படத்தில் வசனத்தையே மாற்றி அப்பாவால் எனக்கு பெருமை என்பதற்கு பதிலாக என்னால் அப்பாவுக்கு பெருமை என விஜய் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற இதனை பார்த்து ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகிறார் அதோடு விஜய்யின் தீவிர ரசிகர்கள் இதனை எச்சரித்து உள்ளனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்