சைலண்டாக நடந்த விக்கி படத்தின் பூஜை.. நயன்தாரா மிஸ்.. ஹீரோயின் இவரா.? வைரலாகும் புகைப்படம்

Vignesh Shivan : இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி என்ன படத்தை எடுத்து திரைக்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவ்வாறு எடுத்த நானும் ரவுடிதான் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது இந்த திரைப்படத்தின் போது நயன்தாரா மீது விக்னேஷ் சிவன் காதலில் விழுந்தார்.

ஏழு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். நயன்தாரா ஒரு பக்கம் பிசினஸ் மற்றும் டாப் ஹீரோவுடன் தொடர்ந்து படம் பண்ணி வருகிறார். விக்னேஷ் சிவன்  காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து அஜித்தை வைத்து படம் பண்ண போவதாக தகவல்கள் வெளியாகின.

ரஜினிக்கு சிவாஜி செய்த உதவி… காலத்துக்கும் நன்றி கடன் பெற்றவராய் இருக்கும் சூப்பர் ஸ்டார்..

ஆனால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு கைநழுவி போனது எனவே இப்பொழுது  நடிகரும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனுடன் கைகோர்த்து ஒரு படத்தை எடுக்க உள்ளார் படத்தை லலித்குமார் தயாரிக்க பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி மற்றும் பலர் நடிக்க இருக்கின்றனர்.  இந்த படத்திற்கு  அனிருத் இசையமைக்க உள்ளார் என கூறப்படுகிறது.

படத்தின் பூஜை இன்று சைலண்டாக போடப்பட்டது இதைத்தொடர்ந்து சூட்டிங் நடைபெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த பூஜையின் பொழுது  தயாரிப்பாளர் லலித் குமார், அனிருத், விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி போன்றவர்கள் உடன் இருந்தனர்.

பிரபு மகளை கரம் பிடித்த ஆதிக் ரவிச்சந்திரன்.. வைரலாகும் திருமண புகைப்படம்.! முதல் ஆளாக வந்த நடிகர்

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இந்த படத்தில் பிரதிப் ரங்கநாதனுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்க இருக்கின்றார் என தகவல்கள் கூறப்பட்டன ஆனால் பூஜையில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இதோ அந்த பூஜையின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Vignesh shivan
Vignesh shivan
Vignesh shivan
Vignesh shivan