ஜப்பானில் தொடர்ந்து 23 வாரங்கள் ஓடி வரலாற்று சாதனை படைத்த ஒரே தமிழ் திரைப்படம்.?

தமிழ் சினிமாவில் நடிக்கும் டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பெரிய வசூலை வாரி குவிக்கிறது. அண்மையில் கூட ரஜினியின் ஜெயிலர், விஜயின் வாரிசு படங்கள் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பெரிய சாதனை படைத்தது இந்த படங்கள் வெளிநாட்டிலும் சக்க போடு போட்டது.

ஆனால் ஒரே ஒரு தமிழ் திரைப்படம் ஜப்பானில் மட்டும் சுமார் 23 வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்திருக்கிறது அந்த படத்தை பற்றி தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம்.. 1995ஆம் ஆண்டு கே எஸ் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் முத்து.. படத்தில் ரஜினி உடன் இணைந்து மீனா, கே எஸ் ரவிக்குமார், சரத் பாபு, ராதாரவி, வடிவேலு..

டிசம்பர் மாதத்தில் மட்டும் வெளியாகும் 6 தமிழ் படங்கள்.. சமையலில் அன்னபூரணியாக கலக்கும் நயன்தாரா

ரகுவரன், பொன்னம்பலம், செந்தில், விசித்திரா, கோமதி, ஜெயபாரதி, டைகர் பிரபாகர், குமரிமுத்து, பாண்டு, ரமேஷ் கண்ணா என பல திரைப்பட்டாளங்கள் நடித்திருந்தனர் படம் முழுக்க முழுக்க  ஆக்சன், எமோஷனல், ரொமான்ஸ் காதல் என அனைத்தும் கலந்து இருந்ததால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது தமிழையும் தாண்டி பல்வேறு இடங்களிலும் அதிக நாட்கள் ஓடி வெற்றி கண்டது.

இந்த படத்தை சிங்கப்பூரில் நன்றாக ஓடியது அப்பொழுது ஒருவர் பார்த்துவிட்டு இந்த படத்தை ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்க முடிவு செய்தார் பலரும் அதற்கு முன் வராத நிலையில் ஒருவர் மொழிபெயர்த்து கொடுக்க பின் ஜப்பானில்முத்து படம் வெளியானது.. அங்கு அமோக வரவேற்பை பெற்றது.

போலீஸ்சார்களை மிரட்டும் கதிர்.! கடைசியில் அள்ளிக்கிட்டு தான் போகணும்.. ஜனனியின் அதிரடி முடிவு

ஒரு தியேட்டரில் மட்டும் சுமார் தொடர்ந்து 23 வாரங்கள் ஓடியது. அங்கு மட்டும் சுமார்  ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேர் பார்த்து உள்ளார்கள் என கூறப்படுகிறது. ஜப்பானில் இப்படி ஒரு சாதனையை முத்து திரைப்படம் பண்ணி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.