முடிவுக்கு வந்த லியோ படத்தின் வசூல்.. மொத்தம் இத்தனை கோடியா.?

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வருபவர் தளபதி விஜய். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக் கொண்டிருக்கிறார் இந்த ஆண்டு வெளியான வாரிசு, லியோ ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்து தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருக்கும் என பேச்சுக்கள் உலா வருகின்றன. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து மைக் மோகன், பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, அரவிந்த், ஆகாஷ், அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, கங்கை அமரன் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர்.

Biggboss 7 : சீரியல் நடிகை ரச்சிதாவின் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் தெரியுமா.? வைரலாகும் இன்ஸ்டா புகைப்படம்

ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது படத்தின் முதல் கட்ட சூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. லியோ வாரிசு போல தளபதி 68 படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் லியோ படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் லியோ. மேலும் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், திரிஷா பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், ஜனனி என பலரும் நடித்திருந்தனர் படம் ஆக்சன் மற்றும் எமோஷனல் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினாலும் பொதுமக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

மக்களுக்கு ஒண்ணுன்னா அரசு தான் உதவனும்.. கொள்கையிலிருந்து மாறாத அஜித்..!

இருந்தாலும் படம் வசூல் ரீதியாக வெற்றி கண்டது அதனால் படத்தின் வெற்றி விழா கூட பெருசாக நடந்து முடிந்ததை நாம் பார்த்தோம் இந்த நிலையில் லியோ படத்தின் மொத்த வசூல் 600.60 வசூலித்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.