Biggboss 7 : சீரியல் நடிகை ரச்சிதாவின் மனம் கவர்ந்த போட்டியாளர் யார் தெரியுமா.? வைரலாகும் இன்ஸ்டா புகைப்படம்

BiggBoss 7 : விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஏழாவது சீசன் 80 நாட்களைக் கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் தற்போது நிக்சன், தினேஷ், மாயா, பூர்ணிமா, அர்ச்சனா, சரவண விக்ரம், விஷ்ணு, விஜய் வர்மா..

ரவினா, மணி, விசித்ரா போன்ற போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதுவரை எவ்வளவோ சண்டை சச்சரவுகள் பிக் பாஸ் வீட்டில் நடந்திருக்கின்றன.. ஆனால் தற்பொழுது பைனல் நெருங்கியுள்ளதால் இருக்கிற கொஞ்ச நாளைக்கு ஜாலியாக விளையாட்டு போகலாம் என போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர்.. அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

மக்களுக்கு ஒண்ணுன்னா அரசு தான் உதவனும்.. கொள்கையிலிருந்து மாறாத அஜித்..!

போட்டியாளர்களுடைய உறவினர்கள் பலரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.. இந்த பிக் பாஸ் 7 யில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் தினேஷ்.. இவர் பிரபல சீரியல் நடிகர் ஆவார் இவருடைய மனைவி ரக்ஷிதா கடந்த பிக் பாஸ் 6 யில் கலந்து கொண்டவர்.

இருவருக்கும் சில மன வருத்தம் காரணமாக தற்பொழுது பிரிந்து இருக்கின்றனர்.. இருந்தாலும் தினேஷ் பிக் பாஸ் 7 யில் தனது மனைவி ரக்ஷிதா குறித்து உருக்கமாக பேசி இருந்தார். அவர் பேசியதை வைத்து பார்க்கையில் தினேஷ் இன்னும் ரக்ஷிதா உடன் சேர்ந்து வாழ விருப்பப்படுகிறார். ஆனால் ரக்ஷிதா தினேஷ் பேசியதற்கு எந்த ஒரு கமெண்டும் எழுப்பவில்லை..

படத்துல ராஜ்கிரண் இருக்காரா.? ஆள விடுங்க சாமி பாதியில் ஓடிய விஜய் – பிரபல இயக்குனர் சொன்ன உண்மை

இந்நிலையில் ரக்ஷிதா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக் பாஸ் 7 விசித்ரா குறித்து ஒரு பதிவை போட்டு இருக்கிறார். இதைப் பார்த்து ரசிகர்கள் ரக்ஷிதா தினேஷுக்கு சப்போர்ட் பண்ணவில்லை அதனால் தினேஷ் உடன் சேர்ந்து வாழும் எண்ணம் ரக்ஷிதாவிற்கு சுத்தமாக இல்லை போல என்று கமெண்ட் எழுப்பி வருகின்றனர்..

vichitra
vichitra