இது யாரு என் மகள் மாதிரி.. முந்திக்கொண்டு முதல் ஆளாக தனுஷ் குடும்பத்திற்கு உதவி செய்த கேப்டன்.. வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்..

Captain Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் தனுஷ் குடும்பத்திற்கு மறக்க முடியாத உதவி செய்துள்ளாராம். கேப்டன் விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு காலமானார். இவருடைய இறப்பு தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர் இதனை அடுத்து 6:00 மணிக்கு தொடங்கிய இறுதி சடங்கு 72 குண்டுகள் முழங்க விஜயகாந்தின் உடல் முழுவதும் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

யார பின்னுக்கு தள்ள பாக்குறீங்க முந்தி கொண்டு வந்த விஜய் டிவி சீரியல்..! இந்த வார சீரியல் டிஆர்பி ரேட்டிங் என்ன தெரியுமா..

அனைவருக்கும் உதவி செய்ய வேண்டுமென்ற நல்ல எண்ணம் கொண்ட சொக்கத் தங்கத்தை இழந்து விட்டதாக பலரும் சோசியல் மீடியாவில் கூறி வருவதை பார்க்க முடிகிறது. அப்படி ஏராளமான பிரபலங்கள் விஜயகாந்த் நெருங்கிய உறவினர்கள் என பலரும் விஜயகாந்த் குறித்து பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தனுஷ் குடும்பத்திற்கும் கேப்டன் விஜயகாந்த் உதவி செய்துள்ளார். அதாவது தனுஷின் அக்கா கார்த்திகா தேவி பிளஸ் டூ முடித்து விட்டு டாக்டர் படிக்க நினைத்தாராம். ஆனால் கட் ஆப் 1 மதிப்பெண் குறைந்ததால் அவருக்கு சீட்டு கிடைக்கவில்லை தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க பணம் இல்லாததால் படிக்க வைக்க முடியாமல் தவித்து வந்துள்ளார் கஸ்தூரிராஜா.

என் புள்ளைய பார்த்துக்க துப்பு இல்ல உனக்கு புடவையா.. விஜயாவை வெளுத்து விட்ட பாட்டி – ஆசை இன்றைய எபிசோட்

இந்த நேரத்தில் தான் கஸ்தூரி ராஜாவை பார்ப்பதற்காக விஜயகாந்த் வந்துள்ளார். அப்பொழுது தனுஷின் அக்கா கார்த்திகா தேவி அழுது கொண்டிருப்பதை பார்த்த விஜயகாந்த் என்ன ஆச்சு என்று கேட்டுள்ளார். நடந்த விஷயங்களை கூற உடனே கேப்டன் நேராக போரூர் ராமச்சந்திரா கல்லூரியில் பேசி மருத்துவ சீட்டு வாங்கி கொடுத்துவிட்டு போனாராம். டாக்டர் சீட் உறுதியாகும் வரையிலும் விஜயகாந்த் தனுஷின் அக்கா உடனே இருந்தாராம்.