யார பின்னுக்கு தள்ள பாக்குறீங்க முந்தி கொண்டு வந்த விஜய் டிவி சீரியல்..! இந்த வார சீரியல் டிஆர்பி ரேட்டிங் என்ன தெரியுமா..

Vijay Tv Serial: 2023ஆம் ஆண்டின் 51-வது வாரத்தில் தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் பட்டியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் நிலை ஏராளமான இல்லத்தரசிகளுக்கு பொழுது போக்காக அமைந்துள்ளது. அந்த வகையில் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

முக்கியமாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் 4 தொலைக்காட்சியின் சீரியல்களுக்கு தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் விஜய் டிவியும் சன் டிவியும் பல வருடங்களாக முதலிடத்திற்கு போட்டி போட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியல் 11.40 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

என் புள்ளைய பார்த்துக்க துப்பு இல்ல உனக்கு புடவையா.. விஜயாவை வெளுத்து விட்ட பாட்டி – ஆசை இன்றைய எபிசோட்

இதனை அடுத்து கயல் சீரியல் 11.38 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தினையும், சுந்தரி இரண்டாவது பாகம் 29.92 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மாரிமுத்து இருந்த வரை டிஆர்பி-யில் தொடர்ந்து முதலிடத்தில் பிடித்து வந்த எதிர்நீச்சல் சீரியல் அவரது இறப்பிற்கு பிறகு சறுக்களை சந்தித்துள்ளது. அதன்படி டிஆர்பி-யில் 9.88 புள்ளிகள் உடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

ஆலியா மானசாவின் இனியா தொடர் 7.74 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆனந்த ராகம் சீரியல் 7.66 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தினையும், விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 7.33 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தினையும், பாக்கியலட்சுமி சீரியல் 7.31 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தையும், ஆஹா கல்யாணம் சீரியல் 6.63 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தினையும் பிடித்துள்ளது.

ஈ அடிச்சான் காப்பி என்பது இதுதானா.? அச்சு அசல் சினிமா பிரபலங்களை போலவே இருக்கும் நபர்கள்

விஜய் டிவியில் மிகவும் சுறுசுறுப்பாக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல், பாக்கியலட்சுமி, ஆஹா கல்யாணம் இந்த மூன்று சீரியல்களும் தான் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பினை பெற்று கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளது.