10 வருடத்திற்கு பிறகு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம்.. எதிர்பார்ப்பை கூட்டிய தங்கலான்

Thangalaan my role vikram speech : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் விக்ரம் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோப்ரா போன்ற ஒரு சில படங்கள் சுமாராக ஓடிய நிலையில் வெற்றிக்காக சிறந்த இயக்குனர்களுடன் கதை கேட்டு வந்த நிலையில் பா ரஞ்சித் சொன்ன தங்கலான் கதை ரொம்ப பிடித்து போகவே உடனடியாக கைகோர்த்தனர்.

தங்கலான் படம் சொல்ல வருவது என்னவென்றால் கோலார் தங்க சுரங்கத்தில் மக்கள் பட்ட கஷ்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றிய படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார், பசுபதி,  ஹாலிவுட் நடிகர் DANIEL CALTAGIRONE மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

ஒன்ஸ் பிக்கப் ஆனா ஆனது தான் போய்கிட்டே இருப்பேன்.. லியோ படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

ஜி வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். தங்கலான் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் சமீபத்தில் படத்தின் புகைப்படங்கள் வெளியான நிலையில் அடுத்து டீசர் வெளியானது இதில் பார்த்தால் ஆக்சன் மற்றும் எமோஷனல் தான் அதிகம் தெரிகிறது. பலருக்கும் பிடித்து உள்ளது.

தங்கலான் பட டீசர் விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு தன்னுடைய ரோல்  பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. தங்கலான் படத்தில் எனக்கு ஒரு வசனம் கூட இல்லை.. பிதாமகன் படம் போன்று இந்த படமும் அமைந்துள்ளது என விக்ரம் பேசியுள்ளார்.

நள்ளிரவில் திடீரென மருத்துவமனைக்கு விசிட் அடித்த தளபதி விஜய்.. என்ன ஆச்சு?

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் வா தலைவா உன்னை மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் பார்க்கத்தான் ஆசைப்பட்டோம் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் மேலும் தங்கலான் படம் வெற்றி பெறும் எனவும் வாழ்த்தி வருகின்றனர்.