ஒன்ஸ் பிக்கப் ஆனா ஆனது தான் போய்கிட்டே இருப்பேன்.. லியோ படம் இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Leo : தன்னுடைய நடிப்பு திறமையின் மூலம் கோடான கோடி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. படத்தின் கதை நாம் ஏற்கனவே பார்த்து, பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் விஜயின் நடிப்பு படத்தை தூக்கி நிப்பாட்டி உள்ளதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மக்கள் மத்தியில் மட்டும் சற்று கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் வசூலில் மட்டும் இதுவரை எந்த ஒரு சரிவையும் லியோ காணவில்லை ஆரம்பத்தில் இருந்தே அதிரடியான வசூலை அள்ளி வருகிறது.

என்ன அர்ஜுன் அடி வயிறு பத்திகிட்டு எரியுதா.! மேகனாவால் தமிழுக்கு அடித்த லக்.. படையப்பா ரஜினி போல் முன்னேற போறாரோ

லியோ படக்குழு எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை அள்ளியதால் நவம்பர் 1ஆம் தேதி லியோ வெற்றி விழா நடத்தியது இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், மன்சூர் அலிகான், அர்ஜுன், கௌதம் மேனன் என பலரும் கலந்து கொண்டனர் அப்பொழுது விஜய் குட்டி கதை சொல்லி ரசிகர்களை வழக்கம் போல சந்தோஷப்படுத்தினார்.

அவரை தொடர்ந்து த்ரிஷா, அர்ஜுன் போன்றவர்களும் விஜய் மற்றும் லியோ படம் குறித்து பேசி அதிரவிட்டனர். இப்படி இருக்கின்ற நிலையில் லியோ திரைப்படம் வெளியாகி இதுவரை உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

தன் பொண்டாட்டியை ஜனனியுடன் கம்பேர் பண்ணி பேசிய விஜய்.! வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் பிரபலம்..

அதன்படி இதுவரை மட்டும் லியோ திரைப்படம் சுமார் 553 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. எப்படியும் 600 கோடியை லியோ தொட்டுவிடும் என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..