பதுங்கி பாயறது எல்லாம் வேலைக்கு ஆகாது.. சீறி பாய்ந்தால்தான் தலை தப்பும்..! விக்ரம் எடுத்த அதிரடி முடிவு.!

Thangalaan movie and teaser release date : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வித்தியாசமான நடிப்பையும் உடல் அமைப்பையும் கொடுத்து உசுரை கொடுத்து நடித்து வருபவர் நடிகர் விக்ரம். இவர் படத்திற்கு படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். அதேபோல் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் வேறுபட்ட கதாபாத்திரமாக தான் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான் இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரின்ஸ் தயாரித்து வருகிறது படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்துள்ளார் இந்த நிலையில் படத்தின் டீசர் ரிலீஸ் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பதுங்கி பாயறது எல்லாம் வேலைக்கு ஆகாது.. சீறி பாய்ந்தால்தான் தலை தப்பும்..! விக்ரம் எடுத்த அதிரடி முடிவு.!

இந்த திரைப்படத்தின் மூலம் தான் ரஞ்சித் மற்றும் விக்ரம் முதல் முறையாக இணைந்துள்ளார்கள் வித்தியாசமான கதைக்களங்களில் தனக்கே உரிய அரசியல் பேசும் பா ரஞ்சித்தும் நடிப்பின் அரக்கனாக போற்றப்படும் விக்ரமும் இணைந்துள்ள கூட்டணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் பல மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படம் கேஜிஎப் எனப்படும் கோலார் சுரங்கத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தில் விக்ரம் நடிப்பு மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில் இந்த திரைப்படம் ஜனவரி 2024 பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியாக இருந்தது ஆனால் திடீரென பொங்கலுக்கு பல திரைப்படங்கள் வெளியாவதால் கல்லா கட்ட முடியாது என எண்ணி திடீரென பொங்கல் ரேசில் இருந்து விலகி உள்ளது.

Leo : விஜய் – த்ரிஷா லிப்லாக் காட்சியை ரசித்து எடுத்தாரா லோகேஷ்.? ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியம்

பொங்கல் தினத்தில் சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினியின் லால் சலாம் ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது இந்த நிலையில் தங்கலான் டீசர் நவம்பர் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் படத்தை அடுத்த வருடம் 26 ஆம் தேதி ஜனவரி மாதம் வெளியிட இருக்கிறது படக்குழு.

மேலும் இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகன் பார்வதி, பசுபதி ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் படம் 26/1/2024 ஆம் ஆண்டு வெளியாக இருப்பதை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

thangalaan movie release date
thangalaan movie release date