பிரபல முன்னணி நடிகையுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் விஜய்.. தளபதி ஆசை நிறைவேறுமா?

Thalapathy 68: தளபதி விஜய் பாலிவுட் முன்னணி நடிகை ஒருவருடன் இணைந்து நடிக்க ஆசையப்படுவதாக பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அது குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் முன்னணி மாஸ் நடிகராக இருந்து வரும் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வருகிறார்.

அப்படி இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டி வருகிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவை விமர்சனத்தை பெற்ற நிலையில் வெளியான 6 நாட்களில் ரூ.461 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இவ்வாறு இந்த படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர் அப்படி தளபதி 68 படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியவர்கள் நடிக்க உள்ளனர்.

விஜய்யுடன் முதன்முறையாக லைலா மற்றும் மீனாட்சி சாவுத்ரி இணைந்து நடிக்க இருப்பதனால் மகிழ்ச்சியில் உள்ளார்கள். பொதுவாக ஏராளமான நடிகைகள் விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவது வழக்கம். ஆனால் விஜய்யும் பாலிவுட் நடிகை ஒருவருடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டுள்ளார். அது குறித்து அவர் பேட்டியளித்த பழைய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த நடிகை வேறு யாருமில்லை கத்ரீனா கைஃப் தான். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் கத்ரீனா கைஃப் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அப்படி விஜய் துப்பாக்கி படம் வெளியான பொழுது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் எந்த நடிகையுடன் நடிக்க நீங்க ஆசைப்படுறீங்க என கேள்வி கேட்க அதற்கு விஜய் கத்ரீனா கைஃப் என யோசிக்காமல் பதில் அளித்துள்ளார். மேலும் கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் இருவரும் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்கள் என்பது. குறிப்பிடத்தக்கது. அந்த விளம்பரமும் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும்.