மேக்னா வயிற்றிலிருந்து கத்தியை பிடுங்கிய சரஸ்வதி.! கொலை பழியிலிருந்து தமிழ் காப்பாற்றுவாரா..! பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்.

தமிழம் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் மேகனாவிற்கு தனது மாமாவை பற்றி அனைத்து உண்மைகளும் உமாபதி மூலம் தெரிய வருகிறது. உண்மை தெரிந்ததால் தனது மாமா கலிவரதனின் சட்டையை பிடித்து உங்களை நான் எவ்வளவு நம்பினேன் ஆனால் நீங்கள் எல்லா உண்மையும் தெரிந்தும் என்னை ஏமாத்தி இருக்கீங்க என கேட்கிறாள். ஆமாம் எல்லாம் உன்னுடைய சொத்துக்காக தான். நீ என் மகனா கல்யாணம் பண்ணிப்ப சொத்து எனக்கு கிடைக்கும் என பார்த்தேன். அது நடக்காது என தெரிஞ்சுகிட்டேன் அதனாலதான் உன்கிட்ட இருந்து சொத்த பறிக்கிறதுக்காக இந்த பிளான நான் போட்டேன் என  உண்மையை சொல்லுகிறான். அது மட்டுமில்லாமல் இப்போ உன்னை போட்டுத் தள்ளவும் போறோம் என சொல்கின்றனர்.

அப்போது அவளது மாமா பையன் அவளிடம் சண்டை போடுகிறான். உடனே இருவரும் சேர்ந்து மேக்னாவை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். வேலைக்கார அம்மா கலிவரதன் மகனின் தலையில் கீழே கிடந்த கட்டையை எடுத்து அடித்து விடுகிறாள். கலிவரதனையும் அடித்து விட்டு அங்கே இருந்து மேக்னா மற்றும் வேலைக்கார அம்மா தப்பித்து காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து போகின்றனர்.போகும்போது தமிழுக்கு போன் பண்ணுகிறாள்.

இப்படிதான் படுக்கைக்கு அழைத்தார்கள்.. சூரத் தேங்காய் போல் உண்மையை உடைத்த தேவி பிரியா?

அப்போது போனை சரஸ்வதி எடுத்து உனக்கு என்ன தான் வேணும் இன்னும் நீ திருந்தலையா என கோபமாக கேட்கிறாள். அப்போது மேக்னா, தமிழ் இல்லையா என்ன எப்படியாவது காப்பாத்துங்க என் மாமா என்ன கொள்ளவராரு நான் அவர்கிட்ட இருந்து தப்பிச்சு என்னோட புது கம்பெனிக்கு போய்கிட்டு இருக்கேன் என சொல்கிறாள்.

உடனே சரஸ்வதியும் நீங்க அங்க போங்க நான் வரேன் என சொல்கிறாள். அப்படி மேக்னா அந்த கம்பெனிக்கு போய்க்கொண்டிருக்கும் போதே இன்னொரு காரில் ரவுடிகள் வந்து மேக்னாவையும் அவளது வேலைக்காரி அம்மாவையும் கத்தியால் குத்தி விட்டு சென்று விடுகின்றனர்.

வெளி உலகத்திற்கு வேஷம் போடுவார்கள் உள்ளுக்குள் ஒரு மிருகம்.! மேலும் ஒரு பிரபல நடிகர் பற்றி சின்மயி குற்றச்சாட்டு..

அப்போது அங்கே வந்த சரஸ்வதி  மேக்னாவை தனது மடியில் எடுத்து வைத்து கத்தியை கையால் எடுக்கிறாள். அப்போது அங்கு வரும் மேக்னா கம்பெனியின் ஊழியர்கள் சொன்னது போலவே மேக்னாவை கொன்னுட்டீங்களே என சரஸ்வதியை பார்த்து சொல்கின்றனர். சரஸ்வதி என்ன செய்வது என தெரியாமல் அவர்களைப் பார்க்கிறாள். அத்துடன் இந்த பிரமோ முடிவடைகிறது.