தமிழிடம் வந்து கண்ணீர் விட்டு அழும் ராகினி.. என்ன முடிவு எடுக்க போகிறார் தமிழரசன்..

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் ஜெயிலுக்குள் இருப்பதால் எப்படியாவது ஜாமினில் எடுத்து விட வேண்டும் என ராகினி முடிவு செய்து இருக்கிறார் அந்த சமயத்தில் கம்பெனியை ராகினி தான் நடத்தி வருகிறார் ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் ராகினி இடம் வந்து கம்பெனி நடத்துவீங்களா மாட்டீங்களா ஆர்டர் எடுப்பீங்களா மாட்டீங்களா சம்பளம் கிடைக்குமா கிடைக்காதா என கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

உடனே கோதை வந்து அனைவரிடமும் பேசுகிறார் கண்டிப்பாக கம்பெனி நடக்கும் சம்பளம் முழுவதும் கிடைக்கும் என வாக்குறுதி கொடுக்கிறார். கோதையை பார்த்தவுடன் ராகினி கண்ணீரில் மிதக்கிறார் உடனே கோதை வா வக்கீலை சென்று பார்க்கலாம் என கூப்பிட்டு போகிறார். அங்கு போய் வக்கீல் இடம் பேசுகிறார்கள். ஜாமீன் கொடுக்கக் கூடாது என தமிழ் மற்றும் கார்த்திக் இருவரும் கூறி விட்டார்கள் என வக்கீல் கூர கோதை கையெடுத்து கும்பிட்டு எப்படியாவது ஜாமீன் கிடைக்க நீங்கதான் வழி செய்ய வேண்டும் என கூறுகிறார்.

கணேஷ் பற்றிய உண்மையை வீட்டில் போட்டு உடைத்த பாக்கியா.. கோவிலில் அமிர்தாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்..

உடனே வேறு வழி இல்லாமல் உங்களுக்காக இதை பண்ணுறேன் உங்களுடைய சிச்சுவேஷன் எனக்கு புரியுது. பெத்த மகள் இப்படி நிற்கிறது உங்களா பார்க்க முடியவில்லை, அதனால் தான் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கீங்க என பேசுகிறார். அடுத்த காட்சியில் தமிழ் மற்றும் கார்த்தி இருவரையும் எதிர்த்து தான் கோதை இந்த வேலையை செய்து வருகிறார். அதற்காக சாமியிடம் மன்னிப்பும் கேட்கிறார்.

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த வீடியோவில் ராகினி தமிழ் வீட்டிற்கு வந்து தேம்பி தேம்பி அழுகிறார். ஆனால் வந்த ராகினியை வீட்டுக்குள் கூப்பிடாமல் அனைவரும் திட்டுகிறார்கள் ஆனால் தமிழ் அவன் கிடக்கிறான் நீ உள்ள வாமா என கார்த்திகை திட்டு விட்டு உள்ளே அழைக்கிறார்.

பெண்ணுடன் சுற்றி வரும் விஷால்.. ரசிகர் பார்த்ததால் முகத்தை மூடிக்கொண்டு ஓட்டம்

ராகினி அழுது கொண்டு என் பிள்ளைக்கு பெயர் வைக்க வேண்டும் அதற்கு நீங்கள் கண்டிப்பாக வந்து சக்கரை தண்ணி ஊத்த வேண்டும் என தன்னுடைய அண்ணனான தமிழையும் அம்மாவையும் அழைக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது..