தமிழுக்கு நல்லது செய்றேன்னு நினைச்சு இப்படி ஒரு துரோகத்தை செஞ்சுட்டியே நமச்சி.! இனிமே ரெண்டு பக்கமும் மொத்து தானா.. தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்

thamizhum saraswathiyum today episode October 30 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் மேக்னாவின் மாமா தமிழ் மற்றும் நமச்சியை அழைத்து வர குடோனுக்கு சென்றுள்ளார்கள். அதற்குள் மேக்னா தன்னை அழகாக காட்டிக் கொள்ள புடவையை விதவிதமாக கட்டி பார்க்கிறார் அப்பொழுது வேலைக்கார அம்மா உள்ளே வந்து பார்க்கும் பொழுது என்ன பாப்பா இத்தனை புடவை கட்டி கட்டி போட்டு இருக்க என கேட்கிறார் அதற்கு மேக்னா இந்த புடவை நல்லா இருக்கா என கேட்க உனக்கு என்னமா மகாலட்சுமி மாதிரி இருக்க எனக் கூறுகிறார்.

உடனே நீங்க வெளியில வெயிட் பண்ணுங்க நான் வேற புடவை கட்டிட்டு வரேன் என கூறுகிறார் மீண்டும் ஒரு புடவையை கட்டிக்கொண்டு காட்ட அதற்கு வேலைக்கார அம்மா நல்லா இருக்கு எனக் கூற உன் ரியாக்சனே சரி இல்லை என மீண்டும் வேறொரு புடவையை கட்டப் போகிறார் மீண்டும் ஒரு புடவை கட்டிக் கொண்டு காட்ட மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க என வேலைக்கார அம்மா கூறி விடுகிறார்.

என் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. த்ரிஷா ஆசையில் மண்ணள்ளி போட்ட நயன்தாரா..

தமிழ் மேக்னா வீட்டிற்கு வருகிறார் மேக்னா வாசலில் வந்து ரிசீவ் செய்துவிட்டு வீட்டிற்கு செல்கிறார் சிறிது நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஜூஸ் கொடுக்கிறார்கள் பிறகு சாப்பிட அழைக்கிறார்கள். அப்பொழுது தமிழ் தன்னுடைய பேமிலி பற்றி கூறிக் கொண்டிருக்கும் பொழுது நமச்சி திருமணமானதை எப்படியாவது மறைத்தாக வேண்டும் என ஜூசை தமிழ் மீது கொட்டி விடுகிறார் .

தமிழ் ரெஸ்ட் ரூம் சென்று வாஷ் பண்ணிக் கொண்டு வருவதற்காக போகிற அந்த சமயத்தில் நமச்சி தமிழுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ஒண்டிக்கட்டையாக தான் இருக்கிறார், வாழ்க்கையில் சாதித்து விட்டு தான் திருமணம் செய்து கொள்வார் என மேக்னாவிடம் கூறிவிடுகிறார் தமிழுக்கு திருமணமானதை நமச்சி மறைத்து விடுகிறார். உடனே மேக்னா மற்றும் அந்த வேலைக்காரம்மா சந்தோஷப்படுகிறார்கள்.

வார இறுதியில் சூடுபிடிக்க தொடங்கிய லியோ வசூல்.! 500 கோடியை கடந்ததால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்..

தமிழ் வார்த்தைக்கு வார்த்தை தன்னுடைய அம்மா சொல்லிக் கொடுத்தாங்கள் என கூறிக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு அம்மா இவங்கதான் என பேச நெஜமாலுமே உங்க அம்மா இவங்க தானா என்ன தமிழ் கேட்கிறார் அதற்கு அந்த வேலைக்கார அம்மா அழுது கொண்டு நான் வேலைக்காரி எனக்கு அம்மா என்ற பட்டத்தை கொடுத்துள்ளார் மேக்னா என கண்ணீருடன் கூறுகிறார். அதன்பிறகு தமிழும் நீங்க ரொம்ப கிரேட் கை கொடுங்க உங்கள வாழ்த்தி ஆகணும் என கை கொடுக்கிறார் அப்பொழுது இருவருக்கும் கனெக்ஷன் ஆகிவிடுகிறது.

இனிமே வழக்கம்போல் மற்ற சீரியலை போல் தமிழும் சரஸ்வதியும் சீரியலிலும் இரண்டு பொண்டாட்டி கதை வரப்போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது.