வார இறுதியில் சூடுபிடிக்க தொடங்கிய லியோ வசூல்.! 500 கோடியை கடந்ததால் விஜய் ரசிகர்கள் உற்சாகம்..

Leo Box Office: விஜய்யின் லியோ திரைப்படம் வெளியாகி பத்து நாட்களை கடந்து இருக்கும் நிலையில் தற்பொழுது பத்தாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டி வருகிறது

அப்படி அதிரடியான ஆக்ஷன் காட்சிகளில் விஜய் மிரட்டி இருப்பதனால் இவருடைய நட்பிற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியான இப்படத்தில் பார்த்திபன், லியோ தாஸ் என்ற இரண்டு விதமான கேரக்டரில் விஜய் நடித்து மிரட்டி உள்ளார்.

வைல்ட் கார்டு என்ட்ரியால் மிரண்டு போன பிக் பாஸ் போட்டியாளர்கள்.! போதும் என ஆண்டவரிடம் கதறல்..

கில்லி படத்திற்கு பிறகு விஜய், திரிஷா இணைந்திருக்கும் நிலையில் இந்த ஜோடி இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக நடித்துள்ளார்கள். லியோ வெளியான முதல் நாளில் ரூபாய் 148 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இதனை அடுத்து முதல் வாரத்தில் ரூபாய் 461 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பாளர் அறிவித்தார்.

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு விடுமுறை நாட்கள் என்பதால் நல்ல வசூல் கிடைத்தது. ஆனால் அதன் பிறகு டிக்கெட் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் தமிழகத்தில் ரூபாய் 5.5 கோடியாகவும், கேரளாவில் ரூபாய் 1.25 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது.

பிக் பாஸ் வீட்டுக்குள்ள இதுதான் நடக்குது.. கூல் சுரேஷ் ஸ்மார்ட்டா விளையாடுறார்.. எலிமினேஷனுக்கு பிறகு முதன்முறையாக பேட்டி அளித்த விஜய் வர்மா

சனி கிழமையான நேற்று மீண்டும் வசூல் அதிகரித்துள்ளது வார கடைசி என்பதால் விடுமுறை நாட்களில் தமிழகத்தில் நேற்று மட்டும் லியோ படம் ரூபாய் 10.3 கோடி வசூல் செய்துள்ளது. பத்தாவது நாளில் 500 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.