அம்மா அக்கா என்று கூட பார்க்காமல் சொத்துக்காக கொலை பண்ண துணிந்த அர்ஜுன்… உண்மையை கண்டுபிடித்த தமிழ்.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்..

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் தமிழ் அர்ஜுனின் ஸ்டேட்மெண்ட் காப்பியை அக்கவுண்ட் டிபார்ட்மெண்டில் இருந்து கேட்டு வாங்கி அதனை பார்க்கிறார்கள் அதில் கலிவரதனுக்கு 15 லட்சம் அனுப்பியதை கண்டுபிடித்து விடுகிறார் உடனே அர்ஜுனிடம் வார்த்தையை வாங்கி ரெக்கார்டிங் பண்ணி ராகினியிடம் நிரூபிக்கலாம் என முயற்சி செய்ய அதனை அர்ஜுன் கண்டுபிடித்து சுதாரித்துக் கொள்கிறார்.

ஆனால் ராகணியிடம் தமிழ் அந்த ஸ்டேட்மெண்ட் காட்டி இதெல்லாம் என்ன என கேள்வி கேட்கிறார் உடனே ராகினி அந்த டாக்குமெண்டை எடுத்து சென்று அர்ஜுனிடம் கேள்வி கேட்க அதற்கு அர்ஜுன் ஏதேதோ சொல்லி மழுப்ப பார்க்கிறார் அதேபோல் பரமு நான் தான் அனுப்பினேன் என கூறி தன் மீது பழியை போட்டுக் கொள்ள பார்க்கிறார் இன்னும் எவ்வளவு தப்பு செஞ்சிட்டு இத மாதிரி சொல்லிட்டு இருக்கீங்க என ராகினி  கேள்வி எழுப்ப அதற்கு அதிர்ச்சி அடைகிறார்கள் அர்ஜுன் மற்றும் அர்ஜுனனின் மாமா.

மகன் என்று கூட பார்க்காமல் சாப்பாட்டில் விஷம் வைத்த அர்ஜுனின் அம்மா… வீட்டுக்குள் அடைபட்ட ராகினி கடைசி நிமிஷத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் தமிழும் சரஸ்வதியும்.

உடனே அர்ஜுன் இன்னும் எவ்வளவு நாள் தான் நான் நடிக்கிறது நான்தான் எல்லாத்தையும் செஞ்சேன் உன்னால என்ன பண்ண முடியும் உன்ன யாரு என்ன நம்ப சொல்லுச்சு உன்ன மாதிரி முட்டாள் இருக்கிற வரைக்கும் எப்படி வேணாலும் தப்பிச்சுக் கொள்ளலாம் என அர்ஜுன் திட்டுகிறார் ஆனால் ராகினி இவ்வளவு நாள் நம்பிடோமே என மனம் உடைந்து நொந்து போய் நிற்கிறார் உடனே மொத்த சொத்தையும் எழுதியதை நிறுத்துகிறேன் என கிளம்பும் நேரத்தில் அர்ஜுன் கையை பிடித்து அடித்து கட்டி போட்டு வைக்கிறார்.

கட்டிப்போட்டு விட்டு ஏதாவது பண்ணனும் என்று நினைத்தால் குழந்தையை கொன்று விடுவேன் என மிரட்டுகிறார் அந்த டாக்குமெண்ட் என் கைக்கு வர்ற வரைக்கும் நான் சொல்றது தான் கேட்கணும் என அர்ஜுன் கூறி விடுகிறார். அடுத்த காட்சியில் தமிழ் மற்றும் சரஸ்வதி வீட்டிற்கு வரும் நேரத்தில் ராகினி எங்கே என கேட்கும் பொழுது ராகினி அழுது கொண்டே வீட்டிற்கு வருகிறார் அவர் ஒன்னும் என்ன செய்யவில்லை உங்க வேலைய பாக்கறீங்களா என கூறிவிடுகிறார்.

தமிழ் நமச்சியின் சதித்திட்டத்தை கண்டுபிடித்த பரமு.. அர்ஜுன் மீது சொத்தை எழுதி வைக்கப் போகும் ராகினி…

அர்ஜுன் அக்கா மற்றும் அம்மா எவ்வளவு சொல்லியும் அர்ஜுன் கேட்கவில்லை அதனால் செல்வத்தை வரவழைத்து இவர்கள் யாராவது தப்பினால் கத்தியால் குத்தி விடு என கத்தியை கொடுத்துவிட்டு செல்கிறார் அதற்கு முன்பே அபியை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார் அவர் தமிழிடம் நடந்த அணைத்தையும் கூற அப்ப குழந்தையை வைத்து தான் மிரட்டுகிறான் என தெரிந்து கொண்டு தமிழ் கிளம்புகிறார்.

ஆனால் மற்றொரு பக்கம் அர்ஜுனை பாசமாக பேசி அர்ஜுனனின் அம்மா விஷம் கலந்து சாப்பாடு கொடுக்கிறார் காரை ஒட்டி செல்லும் நேரத்தில் அர்ஜுனுக்கு மயக்கம் வருகிறது ஆனாலும் தட்டி தடுமாறு சென்று கொண்டிருக்கிறார். அர்ஜுனுக்கு விஷம் வைத்ததை அர்ஜுனின் அக்காவிடம் அவருடைய அம்மா சொல்லிக் கொண்டிருக்கிறார் கதறி அழுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது