அர்ஜுன் பேசிய வீடியோவை ராகினியிடம் காட்டிய தமிழ்.. அர்ஜுன் சட்டையை பிடித்து கேள்வி கேட்ட ராகினி.. அணுகுண்டு புஸ்வானமாகிய கதைதான்..

thamizhum saraswathiyum today episode 29 march : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் ராகினி ஆட்டோக்காரர்கள் இடம் விசாரித்து யார் என்னுடைய வீட்டுக்காரரை கடத்தியது என மொபைலை காட்டி தமிழை அடையாளம் கண்டுபிடிக்கிறார் உடனே தமிழ் வீட்டிற்கு நேரடியாக செல்கிறார் வளைகாப்பு பங்க்ஷன் பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது ராகினி வந்து என்னோட வீட்டுக்காரர் கடத்துனது நீங்க தானே அவரு சாப்பிட முடியாமல் இப்ப ரொம்ப கஷ்டப்படுறாரு சாப்பாடு கொடுக்காம ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கீங்க என பேசுகிறார்.

இப்ப கஷ்டப்படுறானா இப்படித்தான் இருக்கும் சரஸ்வதிக்கும் அதோட விளைவு உனக்கே என்னன்னு தெரியும் தானே என பேசுகிறார் இதனால் ராகினி அமைதியாக இருக்கிறார். மேலும் என் வீட்டுக்காரர் ஒன்னும் எந்த தப்பும் செய்யல அர்ஜுன்னை நாங்க யாரும் கடதுல  சோத்துக்காக உன் வீட்டுக்காரர் தான் ஒளிஞ்சிகிட்டு தமிழ் மேல பழி போடறதுக்கு இந்த மாதிரி செஞ்சான் என பேசுகிறார் அப்படி எல்லாம் அர்ஜுன் செய்ற ஆளே கிடையாது என ராகினி வக்காளத்து வாங்குகிறார்.

ஒரு வழியாக குடித்துவிட்டு ரகளை செய்யப் போகும் முத்து.. பிச்சைக்காரர்கள் என்பது போல் அண்ணாமலையை அசிங்கம் படுத்தும் ஸ்ருதியின் அப்பா.. ரோகிணி மீது செம கடுப்பில் விஜயா..

உடனே நமச்சி உன் புருஷன பத்தி நீயே பாரு என தன்னுடைய மொபைலில் இருந்த வீடியோவை போட்டு காட்டுகிறார் இதனால் ராகினி அதிர்ச்சி அடைகிறார் சொத்துக்காக இப்படி செஞ்சாரா என அதிர்ச்சி அடைந்து நேரடியாக வீட்டிற்கு செல்கிறார் அர்ஜுன் சட்டையை பிடித்து நான் உன்னை நினைத்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தா நீ இல்லாம எவ்வளவு அழுதேன் ஆனா என்ன பத்தியும் குழந்தையை பத்தியும் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒளிஞ்சிகிட்டு ஆட்டம் காட்டுறியா என சட்டையை பிடித்து கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.

ஆனால் அர்ஜுன் ஆமா நான் தான் ஒலிஞ்சேன் உன் அண்ணன் மேல பழி போடுறதுக்காக தான் ஒளிந்தேன் அதற்கு காரணம் நீ சொத்தை எழுதி வைக்கிறேன் என  சொன்னதுதான் என பேசுகிறார் இதனால் ராகினி அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாம இந்த சொத்தால ரெண்டு உசுரு போயிருக்கு நாங்க நடு ரோட்டில் இருந்தும் வீடு கூட இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டோம் என அர்ஜுன் ராகினி மண்டையை கழுவுகிறார்.

பாக்கியா செய்த செயல் அதிர்ச்சியில் உறைந்த மொத்த குடும்பம்..!! வியந்து பார்க்கும் கோபி, ராதிகா.! பாக்கியலட்சுமி புதிய ப்ரோமோ..

உடனே ராகினி  யோசிக்க ஆரம்பித்து விடுகிறார் அடுத்த காட்சியில் கோதை நாளைக்கு கோர்ட் கேஸ் வருகிறது என பேசிக் கொண்டிருக்கும் பொழுது ராகினி நல்ல முடிவாக எடுப்பாள் எனக்கு நம்பிக்கை இருக்கு என கூறுகிறார் ஆனால் அப்படி நீங்க வேணா நம்பலாம் ஆனா அவ அப்படி கிடையாது கண்டிப்பா அர்ஜுன் பேச்ச தான் கேப்பா அர்ஜுன் விடமாட்டான் என தமிழ் கூறுகிறார்.

அடுத்த நாள் கோர்ட்டில் கேஸ் வருகிறது அப்பொழுது ராகினி இடம் நீங்க என்னமா யோசிச்சீங்க உங்களை சொத்தை எழுதிக் கொடுக்கிறத பத்தி ஏதாவது யோசிச்சிங்களா என கேட்க நான் எழுதி கொடுக்க முடியாது அவங்க எனக்காக எழுதி கொடுத்தது நான் எப்படி திருப்பி எழுதி கொடுக்க முடியும் என பேசுகிறார் இதனால் நடேசன் மற்றும் கோதை அதிர்ச்சி அடைகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் அர்ஜுனிடம் விசாரிக்கும் போது நான் சொத்தை ஏமாற்றி வாங்கி இருந்தால் என் பெயரில் தான வாங்கி இருபேன்  ராகினிக்கு  தானே எழுதி கொடுத்து இருக்காங்க இதுல என்ன இருக்கு என பேசுகிறார் உடனே ராகினியும் என் வீட்டுக்காரர் யாரையும் ஏமாத்தல இவங்கள தான் எழுதி கொடுத்தாங்க இவங்க வேணும்னா கேப்பாங்க நான் எழுதி கொடுக்கணுமா என்பது போல் பேசுகிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்கள் இத்துடன் இன்று எபிசோட் முடிகிறது.