அர்ஜுனுக்கே விபூதி அடித்த நமச்சி… தமிழ் அடிமடியிலேயே கையை வைத்த அர்ஜுனின் மாமா.! கோதை சொல்றத இந்த முறையாவது கேளுங்க…

Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் மேகனா தன்னுடைய வேலைக்கார அம்மா உடன் பேசிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மேகனாவிடம் அந்த அம்மா இப்போவாவது நீ உன் மனதில் இருப்பதை தமிழிடம் சொல்லு என கேட்க அதற்கு மேகனா அதற்கு சரியான நேரம் இது கிடையாது எனக் கூறுகிறார் உடனே அந்த அம்மா அப்ப என்ன 60 வயதில் சொல்ல போறியா என கிண்டல் அடிக்கிறார்.

அப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது அர்ஜுன் மற்றும் அர்ஜுனின் மாமா மேகனா வீட்டிற்கு வெளியே வருகிறார்கள் அப்பொழுது மேனேஜரை அழைத்து வீடியோ மற்றும் புகைப்படத்தை அவரிடம் அனுப்பி இதனை மேகனாவிடம் காட்ட சொல்லுகிறார்கள் நல்ல வேலை இது என்னிடம் அனுப்பினீர்கள் நான் போய் காட்டுகிறேன் என உள்ளே சென்று வேறு ஒரு வீடியோ புகைப்படத்தை காட்டி விட்டு புகைப்படம் வீடியோவை காட்டினால் அவர்கள் நம்ப மாட்டார்கள் தேவையில்லாமல் இனிமே இங்க நிக்காதீர்கள் என அர்ஜுன் மற்றும் அர்ஜுன் மாமாவிடம் மேகனாவின் மேனேஜர் கூறிவிடுகிறார்.

Thani Oruvan 2 : அரவிந்த்சாமியை விட பவர்ஃபுல் வில்லனை தேர்வு செய்த தனி ஒருவன் 2 படக்குழு.. லிஸ்டில் இடம் பிடித்த 5 முன்னணி நடிகர்கள்

மேனேஜர் நம்மச்சியை சந்தித்து அவர்கள் காட்ட சொன்ன வீடியோ மற்றும் புகைப்படத்தை நான் காட்டவில்லை இதற்கெல்லாம் கலிவரதன் சாரிடம் நன்றி சொல்லி விடுங்கள் என பேசுகிறார். இப்படி ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க தமிழ் எனக்கு ஆர்டர் கொடுத்த கம்பெனி முதலாளியை பார்க்க சென்றுள்ளார் அப்பொழுது நீங்கள் ஆர்டரை முடித்து விடுவீர்களா? என தமிழ் மீது சந்தேகத்தில் கேட்கிறார்கள் அதுமட்டுமில்லாமல்  புதிதாக நீங்கள் ஆர்டர் எடுத்து உள்ளீர்களா? என பேசுகிறார்கள்.

அதற்கும் இதற்கும் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது கண்டிப்பாக நாங்கள் சொன்ன நேரத்தில் ஆர்டரை முடித்து விடுவோம் என பேசுகிறார். அடுத்த காட்சியில் கம்பெனிக்கு வந்த தமிழ் அனைத்து மெட்டீரியலையும் லாரியில் ஏற்றி அனுப்புகிறார் லாரி சிறிது நேரத்தில் டீக்கடையில் நிற்கிறது அப்பொழுது தமிழின் மாமா அடியாட்களை வைத்து லாரியை கடத்தி செல்ல சொல்கிறார், லாரியை எடுத்துச் சென்றவுடன் தமிழுக்கு போன் பண்ணி கடத்தி சென்றதை டிரைவர் கூறுகிறார்.

உண்மை தெரியாமல் மகாவை திட்டி தீர்க்கும் ராஜேஸ்வரி.. நேரம் பார்த்து ஜால்ரா தட்டிய சித்ராதேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இதை யார் செய்திருப்பார்கள் என தமிழ் குடும்பம் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது இதுவும் அர்ஜுன் வேலையாக தான் இருக்கும் உடனடியாக போலீஸில் கம்பிளைன்ட் பண்ண வேண்டும் என அனைவரும் கிளம்புகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.