இனி உன்ன அணு அணுவா சித்திரவதை செய்யப் போறேன் சொடக்கு போட்டு தமிழிடம் சவால் விட்ட மேகனா..! உச்சகட்ட பயத்தில் சரஸ்வதி..

thamizhum saraswathiyum next week promo : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் எரிந்து போன கம்பெனியை புதுப்பித்து கிராண்டாக ஃபங்ஷனை நடத்த ஏற்பாடு செய்கிறார் தமிழ் அது மட்டும் இல்லாமல் அதற்கு மேகனாவும் வருகிறார் அப்பொழுது தமிழ் மற்றும் சரஸ்வதி ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த அதிர்ச்சி அடைகிறார் அப்பொழுது தமிழில் சட்டையை பிடித்து உனக்கும் சரஸ்வதிக்கும் திருமணம் ஆகி விட்டதா என்கிட்ட இருந்து மறச்சீட்டிங்களா என கோபப்பட்டு கத்துகிறார்.

அது மட்டும் இல்லாமல் அப்பொழுது சரஸ்வதி இது என்ன புது கதையா இருக்கு நாங்க ரெண்டு பேரும் எப்பயோ திருமணம் செஞ்சுக்கிட்டோம். குழந்தை கூட பிறக்க போகுது நீங்க ஏன் திடீர்னு வந்து இப்ப புதுசா கேக்குறீங்க என கேட்க, நமச்சி தான்  உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகல லைஃப்ல செட்டில் ஆன பிறகு தான் திருமணம் சொன்னாரு என கேட்கிறார்.

நடிகர் கரண் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வர இதுதான் காரணமாம்.? உதவிய நடிகர்கள்

உடனே நமச்சி நீ ஏன் இப்படி செஞ்ச என கேட்டுக் கொண்டிருக்க திருமணம் ஆகாத அவர்களுக்கு தான் உதவி செய்வார்கள் என பேசிக் கொண்டார்கள் அதனால் தான் இப்படி செய்தேன் எனக் கூறுகிறார். இப்படியே பேசிக் கொண்டிருக்க வாக்குவாத முத்தி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இந்த நிலையை புதிய பிரமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் மேகனா தமிழிடம் நேருக்கு நேராக வந்து சவால் விடுகிறார்.

சொடக்கு போட்டு இனி ஒவ்வொரு நிமிஷமும் என்ன நினைச்சு நீ வருத்தப்படுவ என்னைய ஏமாத்துனீங்க எனக் கேட்க அதற்கு சரஸ்வதி நாங்க ரெண்டு பேரும் திருமணம் செய்து கொண்டோம் பெங்களூர் வந்தப்ப ஒரே ரூம்ல தான் தங்கினோம் அப்போ கூட உங்களுக்கு தோணலையா அதுமட்டுமில்லாமல் இன்ட்ரடியூஸ் பண்ணும் போதும் நாங்க திருமணம் ஆனவங்கன்னு தானே சொன்னோம் அப்பவும் நீங்க கவனிக்கலையா என கேட்கிறார்.

விஜயகாந்த் தனது திரைப்பயணத்தில் தவறவிட்ட 5 சூப்பர் ஹிட் படங்கள்.! வருத்தப்படும் கேப்டன் ரசிகர்கள்

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது தான் தமிழிடம் சொடக்கு போட்டு என்ன நம்ப வச்சி எல்லாத்தையும் செய்துகொண்டு என்னையே ஏமாத்துரின்களா உங்கள நான்  சித்திரவதை செய்கிறேன் என பேசுகிறார் மேக்னா இன்றைய ப்ரோமோ முடிகிறது.