என் புருஷனையா உள்ள வச்சீங்க இனிமே உங்களுக்கு முழு எதிரியே நான் தான்.! சொடக்கு போட்டு சவால் விடும் ராகினி.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் சமீபத்திய எபிசோடில் தமிழ் டெலிவரிக்கு அனுப்பிய மெட்டீரியலை அர்ஜுன் ஆல் வைத்து கடத்தி தன்னுடைய குடவுனில் அடைத்து வைத்திருக்கிறார் அது மட்டும் இல்லாமல் அர்ஜுன் தான் கடத்தியது என போலீசில் தமிழ் புகார் அளித்தும் எந்த ஒரு பயனும் இல்லை அதற்குத் தகுந்த ஆதாரம் இருக்கிறதா என கேட்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இதனால் மணமுடைந்த தமிழ் வீட்டுக்கு வருகிறார்.

வீட்டுக்கு வந்து விரக்தியாக பேசுகிறார் இந்த பிசினஸ் நமக்கு செட்டாகாது இதுக்கு மேல நம்மால் ஒன்றும் செய்ய முடியாது அவ்வளவுதான் வாழ்க்கையே போச்சு என்பது போல் பேசுகிறார் ஆனால் அந்த சமயத்தில் சரஸ்வதி ஆறுதல் கூறுகிறார். அடுத்த நாள் டெலிவரி செய்ய வேண்டிய கம்பெனிக்கு சென்று தமிழ் நடந்ததை கூற அவர்கள் நீங்கள் வேண்டுமென்றே புதிய கம்பெனிக்கு அந்த மெட்டீரியல் அனுப்பி விட்டீர்கள் அதனால் தான் இந்த பிரச்சனை என பேச  உடனே மேகனா அர்ஜுனிடம் இருந்து வண்டியை கைப்பற்றி கம்பெனிக்கு எடுத்து வருகிறார்.

காசை செலவு பண்ண யோசிக்கும் பாண்டியன்.. நடுவில் மாட்டிக்கிட்டு முழிக்கும் செந்தில், மீனா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

பிறகு எப்படி எடுத்து வந்தீர்கள் என கேட்க மேகனா நடந்த அனைத்தையும் கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் அர்ஜுனே தான் செய்த தவறை ஒப்புக் கொண்டுள்ளார். அர்ஜுனின் கம்பெனி காலவரையின்றி மூடப்படுகிறது இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அப்பொழுது கவர்மெண்டில் இருந்து வந்து அர்ஜுன் கம்பெனிக்கு சீல் வைத்து காலவரையின்றி மூடப்படுகிறது என கூறிவிட்டு செல்கிறார்கள்.

அடுத்த காட்சியில் தமிழ் வீட்டில் அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது நமக்கு இவ்வளவு நாள் தொல்லை கொடுத்து வந்த அர்ஜுன் வசமாக மாட்டிக் கொண்டான் ஜெயிலுக்கு போகிறான் இப்பொழுது நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என பேசிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சமயத்தில் நமச்சி இன்னும் ஒரு வருஷத்துக்கு வெளியில் வர முடியாது அர்ஜுன் என பேச அந்த சமயத்தில் ராகினி வருகிறார்.

காசை செலவு பண்ண யோசிக்கும் பாண்டியன்.. நடுவில் மாட்டிக்கிட்டு முழிக்கும் செந்தில், மீனா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

ராகினி வந்து கைதட்டி எல்லாம் ஜெயிலுக்கு அனுப்பியாச்சு கம்பெனியை இழுத்து  மூடியாச்சுன்னு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களா இனிமேதான் என்னோட ஆட்டத்தை பார்க்க போறீங்க உங்களுக்கு முழு எதிரி இனிமே நான் தான் என சவால் விடுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.