இறைத்த கிணறுதான் ஊரும் .. இன்னும் ஐந்து வருடத்திற்கு எட்டா உயரத்தில் தனுஷ்.. அடேங்கப்பா இத்தனை திரைப்படங்களா…

Actor Dhanush: தற்பொழுது இந்தியாவிலேயே மிகவும் பிசியான நடிகராக தனுஷ் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இவருடைய கைவசம் எத்தனை படங்கள் உள்ளது என்பது குறித்த லிஸ்ட் தற்பொழுது வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பல கடுமையான விமர்சனங்களுக்கு பிறகு வளர்ந்து தற்பொழுது உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் தனுஷ்.

தமிழ் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் கலக்கி வரும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது அப்படி கோலிவுட், பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் டஜன் கணக்கிலான படங்கள் கைவசம் இருப்பதாகவும் இந்தியாவிலேயே செம பிசியான நடிகர் தனுஷ் எனவும் கூறப்படுகிறது.

காசை செலவு பண்ண யோசிக்கும் பாண்டியன்.. நடுவில் மாட்டிக்கிட்டு முழிக்கும் செந்தில், மீனா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

இவருடைய நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் உருவாகியுள்ளது இப்படத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்க அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தனுஷ் 50வது படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை சன் பிரிக்ஸ் நிறுவனம் தயாரிக்க நடிகர் தனுஷ் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்திற்கு ராயன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்கிறார். மேலும் தனது அக்கா மகன் வருணை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி தயாரித்து வருகிறார். இப்படத்திற்கான பூஜையும் சமீபத்தில் நடைபெற்றது இந்த படங்களை தவிர்த்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படமும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படமும் கமிட் ஆகியுள்ளார்.

டோலிவுட் முன்னணி இயக்குனரான தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்கத்தில் D51 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா நடிக்க இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஸ்க் மெயின்.

கோடீஸ்வரி முன்னாடி ரொமான்ஸ் பண்ணும் சூர்யா, மகா.. சித்ராதேவி இதை கவனிப்பாரா.? சிறக்கடிக்க ஆசை ப்ரோமோ

இவ்வாறு மேற்கண்ட படங்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் சில படங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத படங்களும் உள்ளனர் அப்படி வெற்றிமாறன் வட சென்னை 2, எச் வினோத் இயக்கத்தில் ஒரு படம், ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் இயக்கம் ஒரு படம் பியார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கத்தில் ஒரு படம் உள்ளிட்ட டஜன் கணக்கிலான படங்களை வைத்துள்ளார் எனவே ஐந்து வருடங்கள் வரையும் தனுஷுக்கு ஓய்வே கிடையாதாம்.