அர்ஜுனை பிடிக்க வலையை விரித்த தமிழ்.! வலையை கிழித்துக்கொண்டு சுறா மீன் போல் தப்பி சென்ற மாப்பிள்ளை.!

thamizhum saraswathiyum February 5 : தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் இந்த கண்ணாடி துண்டை ஆதரமாக வைத்துக் கொண்டு அர்ஜுன் வீட்டிற்கு போலீஸ் படையுடன் தமிழ் செல்கிறார் அங்கு அர்ஜுன் பரமு அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது தமிழ் அர்ஜுனை அழைக்க அனைவரும் வருகிறார்கள் நீ தான் கொலையை செஞ்சிட்டு நிம்மதியாய் இருக்க அது கடைசி வரை நிலைக்காது என கூறுகிறார்கள்.

ஆனால் ராகினி என்ன அண்ணா சரஸ்வதி அண்ணி கொலை செய்திருக்க மாட்டாங்க அது எனக்கு தெரியும் ஆனா அர்ஜுன் மீது பழியை போடுறீங்க என பேசுகிறார் இவ்வளவு நடந்தும் ராகினி அர்ஜுனுக்கு சப்போர்ட் செய்வது பார்ப்பவர்களுக்கே கடுப்பாக இருக்கிறது. பரமுவை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று கண்ணாடி துண்டை காட்டி விசாரிக்கிறார்கள் அப்பொழுது இது என்னுடைய கண்ணாடி இல்லை என்பது போல் பேசுகிறார்.

சிலுக்கு இன்னும் சாகலடா..? எல்லை மீறிய ரித்திகா சிங் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ங்கள் கமெண்ட்.!

அதற்குள் அர்ஜுன் வக்கீல் உடன் வருகிறார் இந்த கண்ணாடி உடைந்து  10 நாட்களுக்கு மேல் உள்ளது இந்தாங்க அதற்கான ஆதாரம் நாங்க அஞ்சு நாளைக்கு முன்னாடியே இதை மாற்றி இருக்கோம் என பேசுகிறார் அர்ஜுன். உடனே தமிழ் கொலை நடந்த இடத்தில் செல்போன் டவர் சிக்னல் பரமனுடையது காமிக்குமே அதை செக் பண்ணலாம் என கூற அதையும் செக் பண்ணி பார்க்கிறார்கள் ஆனால் பரமன் நம்பர் மட்டும் சுவிட்ச் ஆஃப் என்று வந்துள்ளது.

உடனே வக்கீல் உடன் பரமன் அர்ஜுன் என அனைவரும் கிளம்புகிறார்கள் அவர்கள் போன உடன் போலீஸிடம் தப்பு பண்ணவங்க இவங்க மாட்டவே இல்லையே என தமிழ்  பேச எனக்கு இப்பதான் 100% டவுட் அதிகமாயிடுச்சு கண்டிப்பா இவனுங்க தான் பிளான் பண்ணி இந்த தப்பு பண்ணி இருக்காங்க அதுக்கான எல்லாம் எவிடன்ஸையும் அழிச்சிட்டாங்க என போலிஸ் கூறுகிறார்கள்.

விடாமுயர்ச்சியால் தலையை பிச்சிகிட்டு திரியும் த்ரிஷா.! மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும் அம்முனி.?

என்னதான் நம்ம மேல தப்பு இல்லையென்றாலும் அதற்கான ஒரு ஆதாரம் நம்ம கிட்ட கிடைக்கணுமே என பேசுகிறார் உடனே தமிழுக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது சரஸ்வதி ஆட்டோவில் தான் சென்றுள்ளார் மேகனாவை காப்பாற்ற அந்த ஆட்டோ டிரைவர் சொன்னால் நிரூபிக்க முடியுமா என கேட்கிறார்கள் உடனே அந்த ஆட்டோ டிரைவரை எப்படி கண்டுபிடிப்பது என பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஆன்லைன் தான் அண்ணி புக் பண்ணாங்க அந்த நம்பர் அதுல இருக்கும் என பேசுகிறார்கள்.

உடனே அந்த ஆட்டோ டிரைவரை அழைத்து வர சொல்ல போலீஸ் முடிவு செய்துள்ளது இத்துடன் இன்றைய எபிசோட் முடிகிறது.