சரஸ்வதியை காப்பாற்ற கடைசி ஆயுதத்தை கையில் எடுத்த தமிழ்.! மேக்னா கொலைக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா அர்ஜுன் கேள்வி எழுப்பிய ராகினி.!

thamizhum saraswathiyum february 12 : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் மற்றும் பரமு அடி வாங்கிக்கொண்டு வீட்டில் இருக்கிறார்கள் அப்பொழுது அவர்களுக்கு ஒத்தடம் கொடுத்து கொண்டு இருக்கிறார் அர்ஜுனின் அம்மா மற்றும் பரமுவின் மனைவி போயும் போயும் அடி வாங்கிட்டு வந்து இருக்கீங்களே என பரமுவின் மனைவி திட்டி கொண்டு ஒத்தடம் கொடுக்கிறார்.

அர்ஜுனன் அம்மா நான் உன் அண்ணன் கிட்ட அடி வாங்க தான் புள்ள பெத்து வச்சிருக்கானா என ராகினி மீது கடுப்பில் பேசுகிறார் உடனே எதற்காக அண்ணன் இப்படி நடந்து கொண்டார் என்று எனக்கு தெரியல ஆனா இப்படி நடந்துக்கிற ஆளு அண்ணன் கிடையாது எதற்காக அர்ஜுன அடிச்சாரு என்ன உண்மையை வாங்க நினைக்கிறாங்க எனக்கு ஒண்ணுமே புரியல உண்மைய சொல்லுங்க அர்ஜுன் என கேட்கிறார்.

அண்ணாமலைக்காக முத்து மீனா எடுத்த அதிரடி முடிவு.! மூக்கு உடைந்து நிற்கும் விஜயா…

அப்பொழுது ராகினி மேக்னா கொலைக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா இப்பயாவது உண்மையை சொல்லுங்க என கேட்க நீ என்னையே சந்தேக படுறியா ராகினி என அர்ஜுன் பதிலுக்கு கேட்க நான் சந்தேகப்படல எதற்காக அண்ணன் உங்கள அடிச்சாரு இப்படி அடிக்கிற ஆளே கிடையாது அவர், இதுல ஏதோ இருக்கு என பேசுகிறார்.

கொலை செஞ்சது சரஸ்வதி தானே அந்த பழியை தூக்கி எங்க மேல போடப் பாக்குறாரு உங்க அண்ணன் என பரம கூற உடனே வேலைக்கார அபி கொலை செஞ்சவன் விளங்காமல் போகணும் கை கால் மடங்கி போவோ என சாபம் விடும்போது பேச பதறி அடித்து போய் எதுக்கு இப்ப சாபம் விடுற கொலை செய்தது சரஸ்வதி தானே என பேச, அண்ணி அப்படி செய்கிற ஆளே கிடையாது இதுல ஏதோ இருக்கு கண்டிப்பா ஒரு நாள் அது வெளியில வரும் என பேசுகிறார்.

3 மணி நேரத்திற்கு மேல் இருந்ததால் சுமாரான படமாக மாறி பல்பு வாங்கிய 5 திரைப்படங்கள்.!

அடுத்த காட்சியில் ராகினி அர்ஜுன் மீது சந்தேகப்பட உடனே அர்ஜுன் நடித்துவிட்டு செல்கிறார் கோதைக்கு போன் பண்ணி ராகினி தமிழ் அண்ணா எதற்காக அர்ஜுன கடத்தி அடிக்கணும் என கேள்வி எழுப்புகிறார் தமிழ் மற்றும் நமச்சி வீட்டிற்கு வந்தவுடன் இது போல் எதற்காக அடித்தாய் என கேட்க அந்த கொலைக்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கு அதை சொல்ல வந்தான் ஆனா அதுக்குள்ள ராகினி வந்து தடுத்துவிட்டால் என பேசுகிறார்.

அதுமட்டுமில்லாமல் ஜெயிலில் சரஸ்வதியை துன்புறுத்த சொல்லி இவங்கதான் பணம் கொடுத்திருக்காங்க அந்த ஜெயில் வாடனிடம் என உண்மையை கூற கோதை கட்டையில் போறவன் இதுக்கு மேலயும் திருந்தவே மாட்டான் என திட்டுகிறார். இப்படி பேசிக்கொண்டு இருக்கும் பொழுது கார்த்தி கம்பெனி விஷயமாக பேச தமிழ் கோபப்பட்ட நீயே எல்லாத்தையும் பாத்துக்கோ என திட்டி விடுகிறார்.

மகாவிற்கு அனைவர் முன்பும் முத்த மழை பெய்த சூர்யா!! வயித்தெரிச்சலில் ராஜலட்சுமி, சித்ரா தேவி.!! பரபரப்பான ப்ரோமோ.

அடுத்த காட்சியில் போலீஸ் சந்திக்க தமிழ் செல்கிறார் அப்பொழுது அர்ஜுனுக்கும் அவன் மாமாவுக்கு இந்த கொலைகுக்கு சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியல இதுல வேற எதோ நடந்திருக்கு கண்டிப்பா களிவரதனை நம்ம விசாரிச்சா தான் தெரியும் என பேச போலீசும் ஆமா கொலை நடந்த அடுத்த நாளே அவங்க ரெண்டு பேரும் பெங்களூர் போயிட்டாங்க அப்புறம் பாடி வாங்க தான் வந்தாங்க என பேசுகிறார்கள்.

மற்றொரு பக்கம் கார்த்தி முட்டாள்தனமான ஒரு ஐடியாவை கம்பெனி தொழிலாளர்களுக்கு கொடுக்க தொழிலாளிகள் இது வேண்டாம் ஏதாவது பிரச்சனையாகிடும் என சமாளிக்கிறார்கள் எது நடந்தாலும் நான் பாத்துக்குறேன் நான் சொல்றத நீங்க செய்யுங்கள் என கத்தி விட்டு செல்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்