தமிழை பழிவாங்கிறேன் என நினைத்து மேகனாவிடம் நேரடியாக மோதிய அர்ஜுன்.! புலின்னு தெரியாம அது வால புடிச்சுட்டியே தம்பி..

thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில்  தமிழ் டெலிவரி செய்ய வேண்டிய மெட்டீரியலை அர்ஜுன் மாமா ஆள் வைத்து திருடி விடுகிறார். இதனால் தமிழ் டெலிவரி செய்ய வேண்டிய நேரத்தில் டெலிவரி செய்ய முடியாமல் போகிறது. உடனே அர்ஜுன் வீட்டில் அனைவரும் இருக்க அப்பொழுது அர்ஜுனனின் மாமா ஓடிவந்து டெலிவரி செய்ய வேண்டிய மெட்டீரியலை தூக்கி விட்டேன் என சத்தமாக சொல்கிறார்.

குடும்பமே சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கும் பொழுது தமிழ் போலீஸ் உடன் வந்து டேய் அர்ஜுன் வெளில வாடா என கத்துகிறார் தமிழ். அப்பொழுது ராகிணியும் வெளியே வருகிறார் இவன்தான் மெட்டீரியலை திருடியது என போலீஸிடம் சொல்ல நானே என் கம்பெனியில் ப்ரொடக்சன் நடக்கவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறேன் அதற்கு காரணம் நீங்கதான் இப்ப மெட்டீரியல் திருட்டு பழியை என் பேர்ல போடுறீங்களா என கேட்கிறார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் 2 நபர்கள்.! வாய் கொழுப்புக்கு விழுந்த பூட்டு…

அதுமட்டுமில்லாமல் ராகினி இந்த மாதிரி புத்தி ஏன் அர்ஜுனுக்கு கிடையாது நீங்க தான் அவங்க ஆர்டரை தட்டி பறிச்சீங்க என பேசுகிறார். அந்த சமயத்தில் தமிழ் அடிக்க அடிக்க கை ஓங்குகிறார். அது மட்டும் இல்லாமல் இவர்கள் தான் எடுத்தார்கள் என்றால் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என கேட்க திரு திரு என முழிக்கிறார்கள். பிறகு போலீஸ் வாங்க நம்ம செக் பண்ணலாம் என தமிழை அழைத்துக் கொண்டு போகிறார்கள்.

டெலிவரி செய்ய வேண்டிய கம்பெனியில் போய் தமிழ் பேசுகிறார் மெட்டீரியல் யாரோ திருடி விட்டார்கள் என சொல்ல ஆனால் அந்த முதலாளி நம்பாமல் எனக்கு அனுப்ப வேண்டிய மெட்டீரியலை உங்க புது கம்பெனிக்கு அனுப்பி விட்டீர்களா என கோபப்படுகிறார். எனக்கு மெட்டீரியல் வந்து சேரவில்லை என்றால் உங்களுடைய ஆர்டர் கேன்சல் ஆகிவிடும் என திட்டவட்டமாக கூறிவிடுகிறார்.

ஆக்சன் நோ.. AK 63 படத்தின் கதை இதுவா.? ரசிகர்களை குஷிப்படுத்திய செய்தி

அடுத்த காட்சிகள் தமிழ் யூனியன் ஆபீசுக்கு வருகிறார் அங்கு இதேபோல் ஒரு பிரச்சனை நடக்கிறது மெட்டீரியலை அனுப்ப வேண்டிய கம்பெனி லேட்டாக அனுப்புவதால் பிரச்சனை எழுகிறது அதற்கு சொல்யூஷன் கொடுக்க தமிழ் யோசிக்கிறார் ஏனென்றால் இவருக்கும் அதே பிரச்சனை தான் அந்த சமயத்தில் தமிழ் பேச ஆரம்பித்த உடன் நீங்களே அப்படித்தானே செய்கிறீர்கள் நீங்கள் என்ன சட்டம் பேச வந்து விடுவீர்கள் என தமிழை தர குறைவாக பேசுகிறார்கள்.

அடுத்த காட்சியில் கம்பெனியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது மேக்னா வருகிறார் நடந்த அனைத்தையும் நமச்சி மேகனாவிடம் கூற உடனே மேகனா நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண வேண்டிய பிசினஸில் தான் அவன் கையை வைத்துள்ளான் இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என மினிஸ்டர் இடம் கால் செய்து ஹெல்ப் கேட்கிறார் உங்களுக்கு தேவையான உதவியை நான் செய்கிறேன் என கூறுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

அர்ஜுனின் புதிய கெட்டப்.. ஒருவேளை விடாமுயற்சி திரைப்படத்திற்காகவா.? வைரலாகும் புகைப்படம்..

இனிமேல் அர்ஜுன் எங்கு போனாலும் தப்பிக்க முடியாது ஏனென்றால் மேகனா செல்வாக்கு மிக்கவள் அவரிடம் இருந்து அவ்வளவு எளிதாக தப்ப முடியாது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்