வில்லாதி வில்லனாக மாறி அர்ஜுனை உருட்டு கட்டையை எடுத்து அடித்த பரமு.. சுயநினைவு இல்லாமல் சுருண்டு கிடக்கும் அர்ஜுன்.. தமிழ் மீது விழுந்த கொலை பழி..

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் மற்றும் பரமு காரில் வந்து கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது பரமு எப்படி மாப்பிள்ளை கற்கண்டுல ஏதோ கலந்து வச்சேன்னு சொன்னீங்க ஆனா கடைசில நீயே தின்னுட்டியே உனக்கு ஒன்னும் ஆகலையா என கேட்கிறார் அதுதான் என்னுடைய ஐடியா இப்ப ராகினி முழுசா என்ன நம்புரா சிம்பதி கிரியேட் பண்ணியாச்சு இனிமே யார் சொன்னாலும் யார் பேச்சையும் கேட்க மாட்டா என பேசுகிறார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் எப்படி மாப்பிள என்கிட்ட கூட சொல்லாம இதெல்லாம் செஞ்சீங்க என கேட்க உங்களிடம் சொன்னால் விஷயம் லீக் அவுட் ஆயிடும் அதனாலதான் சொல்லல ஆனா அக்காவையும் அம்மாவையும் வேகமா சொல்ற மாதிரி பேச சொன்னா ஆனா அந்த அபி ஓட்டு கேட்டுட்டு தமிழ் கிட்ட சொன்னான் தமிழ் உடனே கொந்தளிச்சு என் மேல கைய வச்சான் ஆனாலும் மாப்பிள்ளை நீ அடி வாங்கிட்டியே என்ன பரமு பேசுகிறார்.

கோபிக்கு உதவ மறுத்த ராதிகா..அமிர்தாவிற்காக பாட்டியிடமே சண்டை போட்ட எழில்.. பாக்கியாவின் பிரச்சினையை தீர்த்து வைத்த பழனி..

அதுமட்டுமில்லாம தமிழ் இனிமே சும்மா இருக்க மாட்டான் கண்டிப்பா களிவரதனுக்கு பிரஷர் கொடுக்க ஆரம்பிச்சிருவான் கலிவரதன் தான் உன் பேரை சொல்லிட மாட்டானா மாப்பிள்ளை எனக் கேட்க அதெல்லாம் சொல்ல மாட்டார் என பேச ஒருவேளை என் பேர சொல்லிட்டா என்ன பண்றது என கேட்கிறார் அதற்கு உங்க பேர சொன்னா எனக்காக கொஞ்ச நாள் உள்ள இருங்க நான் வெளியிலிருந்து எடுத்து விடுகிறேன் என பேச பரமு கோபப்படுகிறார்.

ஏற்கனவே உனக்காக நிறைய டைம் ஜெயிலுக்கு போயாச்சு மாப்பிள்ளை இதுக்கு மேல என்னால முடியாது என பேசுகிறார். எப்படி மாப்பிள என் பேர சொன்னா என்ன ஃபுல்லா உள்ள வச்சுட்டு நீ வெளியில ஜாலியா இருக்கலாம்னு பாக்குறியா என கேட்கிறார் அப்படி இல்ல மாமா நான் கண்டிப்பா உங்களை வெளியே எடுத்து விடுவேன் நான் வெளியே இருந்தா தானே உங்கள எடுக்க முடியும் என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் நீங்க உள்ள இருக்கறதால யாருக்கும் இங்க நஷ்டம் கிடையாது கொஞ்ச நாள் உள்ள இருந்துட்டு வாங்க என அர்ஜுன் தெனாவட்டாக பேசுகிறார்.

அதற்கு பரமு இந்த நடிப்பெல்லாம் உன் பொண்டாட்டியோட வச்சுக்கோ என்கிட்ட வச்சுக்காத நான் உள்ள போனேனா கண்டிப்பா உன்ன பத்தி ஜெயில்ல சொல்லுவேன் அது மட்டும் இல்லாம ராகினி கிட்டையும் உன்னை பத்தி சொல்லுவேன் என பேச பரமு சட்டையை பிடித்து ஏதாவது வில்லத்தனம் பண்ணனும் நினைச்ச அப்படியே கொன்னு புதைச்சிடுவேன் என மிரட்டுகிறார் அக்கா புருஷன்ன்னு பார்த்தா ரொம்ப தான் பேசுற என இன்னும் மிரட்ட அதற்கு பரமு அமைதியாக இருந்து விட்டு உருட்டு கட்டையை எடுத்து மண்டையில் நாலு அடி அடிக்கிறார் இதனால் காது மூக்கில் இருந்து ரத்தம் வருகிறது.

விஜயாவை அப்பட்டமாக ஏமாற்றும் ரோகிணி… நமக்கு சோறு தான் முக்கியம் என சோத்தை திங்கும் மனோஜ் வாழ்க்கையை வெறுத்து பேசும் ரவி…

எங்க போயிட்டியோ என காரில் ஏற்றுக்கொண்டு ராகினி இருக்கும் ஹாஸ்பிடலுக்கு சென்று நாடகமாடுகிறார் அந்த தமிழ் அடிச்சதால தான் மாப்பிள காது மூக்குல இருந்து ரத்தம் வருது செத்துப் போயிட்டான் போல என பேசுகிறார். ராகினி செக்கப் பண்ணி விட்டு எவ்வளவு எழுப்பியும் எழுந்திரிக்காமல்  அமைதியாக இருக்கிறார் அர்ஜுன்.

பரமு நைசாக அர்ஜுனை போட்டு தள்ளிவிட்டு அந்த பழியை தூக்கி தமிழ் மீது போடுகிறார் மற்றொரு பக்கம் வளைகாப்பில் நடந்த பிரச்சினை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது உடனே அபி போன் பண்ணி நடந்த அனைத்தையும் கூறுகிறார்கள் உடனே நமச்சி அனைவரிடமும் கூற இதுல ஏதோ மர்மம் இருக்கு கண்டிப்பா கண்டுபிடிக்கணும் என பேசுகிறார்கள். ராகினியிடம் டாக்டர் செக் பண்ணி விட்டு அர்ஜுன் கோமா ஸ்டேஜ்க்கு போயாச்சு எப்ப வேணாலும் நினைவு திரும்பலாம் ஆனால் நினைவு லேட்டா தான் திரும்பும் என கூறிவிடுகிறார்.

இதனால் பரமு சந்தோஷப்படுகிறார் ஆனாலும் அந்த தமிழ் அடிச்சதால் தான் இப்படி ஆயிடுச்சு என நாடகம் ஆடுகிறார் இதனால் அர்ஜுனனின் அம்மா மற்றும் அக்கா அனைவரும் தமிழை திட்டுகிறார்கள் ராகினி புலம்பி கொண்டிருக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.