தளபதியின் கடைசி படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா.! ஆடிப்போன திரையுலகம்..

Thalapathy Vijay’s last movie salary: தளபதி விஜய் விரைவில் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் முழுவதுமாக ஈடுபட இருப்பதனால் முழுவதுமாக சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இந்த சூழலில் இவருடைய கடைசி படத்திற்கான சம்பளம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அஜித், தனுசுக்கு no சொல்லிவிட்டு சூர்யா என்றவுடன் கிரீன் சிக்னல் கொடுத்த பிரபல நடிகை..

விஜய் வாரிசு படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தின் உச்சத்தினை தொட்டார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. தற்பொழுது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது கோட் படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் விஜய் நடித்த வருகிறார். அதற்கான போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்களை விஜய் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் ரசிகர்களும் இந்த படத்திற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.

காலில் விழ சொன்ன சிட்டி.. காரை விற்று நண்பர்களின் கடனை அடைத்த முத்து.! மனோஜ் போல் பார்க்கில் உட்கரபோறாரா.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை.

தான் ஒப்புக்கொண்ட படங்கள் முழுவதுமாக முடிந்ததும் தான் அரசியலுக்கு வருவேன் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்தது அதன்படி பார்த்தால் விஜய் நடிப்பில் தளபதி 69வது படம் தான் கடைசி படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் இயக்குனர் தேர்ந்தெடுக்கும் பணிகள் தான் மிகவும் மும்பரமாக நடைபெற்று வருகிறதாம். இப்படம் தெலுங்கு டிடிவி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு விஜய்யின் சம்பளமாக 200 கோடி வரை பேசப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது அதிகமாக கூட வாய்ப்பு இருக்கிறதாம். இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் டாப் இடத்தில் இடத்திலிருந்து விஜய் விலகுவதற்கு பெரிய தைரியம் தான் என பேச்சுக்கள் எழந்துள்ளது.