Thalapathy 68 : ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியான புதிய புகைப்படம்.! யார் யார் இருக்காங்க பாருங்கள்..

Thalapathy 68 : தளபதி விஜய் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வசூல் சக்கரவர்த்தியாக மாறி உள்ளார் இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான வாரிசு, லியோ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி அடைந்த நிலையில் அடுத்து வெங்கட் பிரபுவுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து “தளபதி 68” படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தளபதி விஜயை இளமையாக காட்ட திட்டமிட்டு இருக்கிறது படகுழு படத்தில் விஜய் உடன் இணைந்து 90 ஸ் நடிகர், நடிகைகளான லைலா, சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன் போன்றவர்கள் நடிக்கின்றனர் மேலும் விடிவி கணேஷ், யோகி பாபு, மீனாட்சி சவுத்ரி, அரவிந்த் ஆகாஷ்..

சினிமா தான் எனக்கு அனைத்தையும் கொடுத்தது.. அப்பா என்றால் அது இந்த நடிகர் மட்டும் தான்? நயன்தாராவின் கலக்கல் பேட்டி

அஜ்மல் அமீர், பிரேம்ஜி கங்கை அமரன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தளபதி 68 படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் சம்பந்தப்பட்ட படமாக இருக்கலாம் என பேச்சுக்கள் அடிபடுகின்றன இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அதாவது தளபதி 68 படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இருக்கும்  என கூறப்பட்ட நிலையில் தற்பொழுது படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் லைலாவும், பிரஷாந்த்தும் இருக்கின்றனர்.

அர்ச்சனாவை ரவுண்டு கட்டிய ஹவுஸ் மெட்ஸ்கள்.! ஒருத்தவங்களோட வீக்னஸ் தெரிஞ்சுக்கிட்டு அதை குத்தி குத்தி காட்டுறது தான் உங்களோடைய பொழப்பே..

தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்த பலரும் ஒரு வேளை தளபதி 68 படத்தில் இவர்கள் ஜோடியாக இருப்பார்கள் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..  இதோ  ரசிகர்களை கவர்ந்த தளபதி 68 படத்திலிருந்து வெளியான புகைப்படம்.