விஜய்க்கு ஜோடியா நடிக்க வைப்பாங்கன்னு பார்த்தா இப்படி தங்கச்சின்னு சொல்லிட்டாங்களே..! குமுறும் இளம் நடிகை.!

Thalapathy 68 : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ என்ற திரைப்படத்தில் நடித்த முடித்து இருந்தார் இந்த திரைப்படம் திரைக்கு வந்து வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் விஜய் திரை பயணத்தில் 600 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை அடைந்தது. இந்த நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது மேலும் படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.. படப்பிடிப்பு சென்னையில் துவங்கி தாய்லாந்தில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது இதனை தொடர்ந்து அடுத்ததாக துருக்கியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

ஒரே தட்டில் சாப்பாடு.. அண்ணன் தம்பி போல் பழகிய நடிகரை கடைசி நேரத்தில் பார்க்காமல் போன எம் ஜி ஆர்

ஏற்கனவே தளபதி 68 திரைப்படத்தில் பல நடிகர்கள் நடிக்கிறார்கள் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் ஒரு டைம் டிராவல்ஸ் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் பல டைம் டிராவல்ஸ் திரைப்படங்கள் வெளியாகி ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு தங்கை சென்டிமென்ட் திரைப்படம் நன்றாக ஓடிவிடும்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியாகிய தங்கை சென்டிமென்ட் திரைப்படம் அனைத்தும் சூப்பர் ஹிட் தான் அப்படித்தான் லியோ திரைப்படத்திலும் தங்க செண்டிமெண்ட் காட்சியை வைத்து ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்தார்கள் லியோ திரைப்படத்தில் மடோனா செபஸ்டியன் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.

விஷ்ணு, அர்ச்சனா இடையே மோதல்.. கதி கலங்கிய ஹவுஸ் மேட்ஸ் – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

மேலும் தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிப்பதற்கு இளம் நடிகை லவ் டுடே திரைப்படத்தில் நடித்த இவானா விஜய்க்கு தங்கியாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இவர் எப்படியாவது விஜயுடன் ஜோடி போட்டு நடித்து விட வேண்டும் என எண்ணத்திலிருந்துள்ளார் ஆனால் இவருக்கு தற்பொழுது தங்கை வேடம் மட்டுமே கிடைத்துள்ளதாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்