ஒரே தட்டில் சாப்பாடு.. அண்ணன் தம்பி போல் பழகிய நடிகரை கடைசி நேரத்தில் பார்க்காமல் போன எம் ஜி ஆர்

MGR : சினிமாயுலகில் போட்டிகள் இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நடிகர்கள் நல்ல நட்புடனும், அண்ணன் தம்பி போல பழகி வருகின்றனர். அப்படி எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் பெரிய போட்டிகள் நிலவினாலும் நிஜத்தில் இரண்டு பேருமே நல்ல அண்ணன் தம்பிகள் போல் தான் இருந்துள்ளனர்.

ஸ்ரீ பாலகான நாடக கம்பெனியில் சிவாஜி வேலை செய்து நடித்து வந்தார் ஒருமுறை சென்னை ஸ்ரீ பாலகான சென்னையில் முகாமிட்டிருந்தது அப்பொழுது எம்ஜிஆரின் வீடு பக்கத்தில் இருந்ததாம் இதை தெரிந்து கொண்ட சிவாஜி காலை, மாலையிலும் ஓய்வு நேரம் கிடைக்கும் பொழுது அங்கு போய்விடுவாராம்..

விஷ்ணு, அர்ச்சனா இடையே மோதல்.. கதி கலங்கிய ஹவுஸ் மேட்ஸ் – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

எம்ஜிஆரின் அம்மா சிவாஜியை ஒரு மகன் போலவே பார்த்தார். எம்ஜிஆர் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிட உட்கார்ந்து இருப்பாராம். ஆனால் எம்ஜிஆரின் அம்மா சிவாஜி வரட்டும் சேர்ந்து சாப்பிடலாம் என சொல்லுவாராம் எம்.ஜி. ஆரும் காத்திருந்து பின் இருவரும் சாப்பிடுவார்களாம் அதன் பிறகு தான் சத்யாம்மாள் சாப்பிடுவார்களாம். எம்.ஜி. ஆரும்  – சிவாஜியும் அண்ணன் தம்பி போல பழகி வந்தனர்.

சிவாஜி வேலையில்லாத நாட்களில் எம்ஜிஆர் கையில் இருக்கும் பணத்தை எனக்கு செலவு செய்வார் சினிமா கூட்டிட்டு போய் வீடு வரும் பொழுது வழியில் சப்பாத்தி வாங்கி கொடுத்து சாப்பிட வைத்து என்னை வீட்டில் விடுவார், ஒரு தட்டில் சாப்பிட்டு. ஒரே அறையில் தங்கி அண்ணன் தம்பியாய் பழகிய எங்களின் உறவை இந்த அரசியல் பிரித்துவிட்டது என சிவாஜி ஒருமுறை சொல்லி கண்கலங்கிய சம்பவமும் இருக்கிறது.

வெங்கட் பிரபுவை டிலில் விடுங்க.. “தளபதி 68” அப்டேட் கொடுத்த நடிகை

எம்ஜிஆர் சிவாஜி வீட்டில் கமலாமாள் செய்யும் விரால் மீன் குழம்பு ரொம்பவும் பிடிக்குமாம் அவருக்கு கொடுக்காமல் சாப்பிட்டால் குழந்தை போல வீடு தேடி வந்து சிவாஜியிடம் சண்டை போடுவாராம்.  இப்படி பழகி வந்தனர் 1984 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் -க்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

Sivaji
Sivaji

அப்பொழுது அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். அப்பொழுது தனிப்பட்ட முறையில் சிவாஜியை சந்திக்க விரும்பினார் சிகிச்சை முடிந்தது சென்னை வந்த பின்னரும் சிவாஜியை தனிப்பட்ட முறையில் சந்திக்க ஆசைப்பட்டார் ஆனால் கடைசி வரை அது நிறைவேறவே இல்லையாம்..