வில்லனாக களம் இறங்க போகும் சூப்பர் ஸ்டார்.. எந்திரனுக்கு டப் கொடுக்க போகும் ரஜினி..

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து கொண்டிருக்கும் நிலையில் அண்ணாத்த படத்தின் மோசமான விமர்சனத்திற்கு பிறகு ஜெயிலர் என்ற வெற்றி படத்தை கொடுத்து சினிமாவில் கலக்கி வருகிறார். இதனை அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இப்படத்திலும் இவருடைய கேரக்டர் பெரிதளவிலும் பேசப்பட்டது. திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லால் சலாம் படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தற்பொழுது டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு நடந்த விபத்து.! இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு..

வேட்டையன் படம் பிரம்மாண்ட பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் நிலையில் இன்னும் சில வாரங்களில் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் நிறைவடைய இருக்கிறது. அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.

தரமான கதைகளத்துடன் லோகேஷ் கனகராஜ் தயாராகி வரும் நிலையில் இந்த படத்தில் ரஜினியின் கேரக்டர் எந்திரன் சிட்டிசனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ரஜினியின் நெகட்டிவ் கதாபாத்திரம் அமையும் என கூறப்படுகிறது. அந்த வகையில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை தந்து வரும் லோகேஷ் கனகராஜ் ரஜினியை நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க இருப்பதினால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

வெற்றி துரைசாமிக்கு அஞ்சலி செலுத்த சென்ற விஜய்.! வாசலோடு திரும்பிய சோகம்.? என்ன நடந்தது தெரியுமா.?

இப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் கடைசி வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். கடைசியாக லோகேஷ் விஜயை வைத்து எடுத்த லியோ திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்றது தற்போது அதனை சரி செய்து ரஜினியுடன் மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.