ரஜினிக்கு நோ சொல்லி.. விஜயின் GOAT படத்தில் கமிட்டான மலையாள நடிகர்!

தமிழ் சினிமா உலகில் இருக்கும் குணச்சித்திர நடிகர்கள் காமெடி நடிகர்கள் ரஜினி விஜய் அஜித் போன்றவர்களுடன் நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுவது வழக்கம்.. காரணம் இவர்களது படத்தில் நடித்தால் தன்னுடைய மார்க்கெட் உயர்வுது மட்டுமில்லாமல் பட வாய்ப்புகள் குவியும் என்பதுதான்.

தளபதி விஜய் வாரிசு, லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்து தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் ஏற்கனவே லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, விடிவி கணேஷ், பிரபுதேவா, பிரசாந்த், என் ஜி கங்கை அமரன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

ஹீரோலாம் ஒரு ஓரமா போய் விளையாடுங்க.. வில்லனாக நடித்து பல கோடி சொத்து சேர்த்த 5 நடிகர்கள்..

இந்த நிலையில் மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளார். அந்தப் பிரபலம் வேறு யாரும் அல்ல.. மலையாளத்தில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஜெயராம் தான் இவர் ஏற்கனவே விஜய் உடன் இணைந்து நடித்த நிலையில் தற்போது  GOAT திரைப்படத்தில் விஜய் உடன் மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படம் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் GOAT படத்தில் இணைந்தது குறித்து அவர் மனம் திறந்து உள்ளார். விஜய்யை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என கேட்க ஜெயராம் ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்திலும் விஜயின்  GOAT படத்திலும் நடிக்க அழைப்பு வந்தது.

விஜயகாந்துக்கு பிடித்த கார், பொத்தி பொத்தி பாதுகாத்த பொக்கிஷம் என்ன தெரியுமா.? சோகமான ரசிகர்கள்

ஆனால் நான் அதிகம் யோசிக்காமல் விஜய் உடன் நடிக்க முடிவெடுத்தேன் இதிலிருந்து எனக்கு விஜய் எவ்வளவு பிடிக்கும் என தெரிந்து கொள்ளலாம் என கூறி உள்ளார். ஒரு நடிகர் பொதுவாக ரஜினி உடன் நடிக்கவே ஆசைப்படுவார்கள் ஆனால் ஜெயராம் விஜய் உடன் நடித்தது தற்போது தளபதி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.