ஹீரோலாம் ஒரு ஓரமா போய் விளையாடுங்க.. வில்லனாக நடித்து பல கோடி சொத்து சேர்த்த 5 நடிகர்கள்..

Villain Actors: தமிழ் சினிமாவை பொருத்தவரை ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறதோ அதே போல் வில்லன் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீப காலங்களாக ஏராளமான முன்னணி நடிகர்கள் தொடர்ந்து வில்லனாக நடித்து கலக்கி வருகின்றனர்.

அப்படி வில்லனாக நடித்தாலும் அதிக சம்பளமும் தரப்படுகிறது எனவே ஹீரோவாக நடித்தால் வேலைக்காகாது என வில்லனாக நடித்து பல கோடி சொத்து சேர்த்து வைத்திருக்கும் ஐந்து வில்லன் நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

ராணா டகுபதி: இவர் சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தால் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அப்படி மெயின் வில்லனாக இருக்கும் ராணா அதிகபட்ச சம்பளமாக ரூபாய் 5 கோடி வாங்குகிறாராம். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

என்னது விஜயகாந்த் ஹீரோவா என்னால் நடிக்க முடியாது.. என் கேரியர் அவ்வளவுதான் எனத் தெரித்து ஓடிய 5 நடிகைகள்..

முகேஷ் ரிஷி: நடிகர் முகேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல லாங்குவேஜ் படங்களில் வில்லனாக நடித்திருக்கும் நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு 41 கோடியாம்.

பிரகாஷ் ராஜ்: தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படங்களிலும் வில்லனாக நடித்து வரும் பிரகாஷ் ராஜ் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க அதிகபட்சமாக 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அப்படி இவருடைய மொத்த சொத்து மதிப்பு 42 கோடி எனக் கூறப்படுகிறது இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

சத்யராஜ்: வில்லனாக நடித்து பல கோடி சம்பாதித்து வைத்திருக்கும் இந்த லிஸ்டில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் சத்யராஜ் வில்லனாக மட்டுமல்லாமல் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அப்படி தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துவரும் சத்யராஜ் சொத்து மதிப்பு 67 கோடியாம்.

ஸ்ருதியின் பணதிமிருக்கு முடிவுகட்டிய முத்து.! இனிதான் இருக்கு மீனாவின் ஆட்டமே – சிறகடிக்க ஆசை எபிசொட்

ஆஷிக் வித்யார்த்தி: தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மொத்தமாக 200 படங்களுக்கு மேலாக வில்லனாகவும், குணச்சித்திர ஹீரோவாகவும் நடித்துள்ளார். அப்படிப்பட்ட இவருடைய சொத்து மதிப்பு 84 கோடியாம். இந்த லிஸ்டில் முதல் இடத்தைப் பிடித்து இருக்கும் ஆஷிக் வித்யார்த்தி சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.