தோல்வியில் துவண்டு கிடந்து 2023-ல் கொடி கட்டி பறந்த மூன்று இயக்குனர்கள்.! ஒவ்வொன்றும் தரமான படமாச்சே..

Tamil top 3 directors in 2023 : தொடர்ந்து அடுத்தடுத்த பல தோல்விகளை சந்தித்தும் அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல் 2023 மீண்டும் படத்தை இயக்கி ஹிட் கொடுத்துள்ளனர் 3 இயக்குனர். 2023ஆம் ஆண்டு ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்துக்கும் ரசிகர்கள் தங்களது நல்ல ஆதரவை கொடுத்திருந்தனர். அந்த வகையில் தோல்வியை சந்தித்து வந்த மூன்று இயக்குனர்கள் 2023ஆம் ஆண்டில் வெற்றி படங்களை கொடுத்துள்ளனர்.

அச்சம் என்பது இல்லையே.. ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் அருண் விஜயின் மிஷன் சாப்டர்-1 டிரைலர்.!

சித்தா: 2014ஆம் ஆண்டு வெளியான பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் இயக்குனராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் எஸ்.யு அருண்குமார். இந்த படத்தின் வெற்றினை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் படும் தோல்வினை சந்தித்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டு சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா படத்தை இயக்கியிருந்தார். சித்தா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் பெற்றது.

மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான AAA, பாஹிரா ஆகிய இரண்டு திரைப்படங்களுமே படும் தோல்வியை சந்தித்தது இதனை அடுத்து இந்த ஆண்டு எஸ்.ஜே சூர்யா, விஷாலை வைத்து மார்க் ஆண்டனி படத்தினை இயக்கியிருந்தார் இப்படம் குறைவான பட்ஜெட்டில் உருவாகி 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. 

விஜயகாந்த் மறைவு.. பார்க்க முடியாமல் கண்ணீரில் மிதந்த வடிவேலு .. அவரின் நண்பர் சொன்ன தகவல்..

துணிவு: அஜித், ஹெச். வினோத் கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இவர்களுடைய கூட்டணியில் வலிமை திரைப்படம் வெளியானது. ஆனால் படம் கலவை விமர்சனங்களை பெற்று வசூலிலும் தோல்வி அடைந்தது இதனை அடுத்து மூன்றாவது முறையாக ஹெச். வினோத், அஜித் கூட்டணியில் இந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் துணிவு.