2023ல் மாஸ் காட்டிய டாப் 10 தமிழ் திரைப்படங்கள்..

Tamil Top 10 Movies: 2023ஆம் ஆண்டு சினிமாவிற்கு சாதகமாகவே அமைந்தது சில வருடங்களாக சினிமாவிற்கு சொல்லும் அளவிற்கு வருமானம் இல்லை ஆனால் இந்த வருடம் பொன்னாண்டாக அமைந்தது. அந்த வகையில் இளம் நடிகர்கள் முதல் முன்னணி நடிகர்களின் படங்கள் வரை வெளியாகி பல கோடி வசூல் செய்து பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு இரண்டு படங்கள் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1. லியோ: விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான லியோ உலகம் முழுவதும் ரூ.618.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்து தமிழில் அதிக வசூல் செய்த படமாக முதலிடத்தை பிடித்துள்ளது லியோ.

2. ஜெயிலர்: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார் என மலையாள மற்றும் கன்னடா நடிகர்களும் இணைந்து நடித்த ஜெயிலர் படம் ரூ.605.8 கோடி வசூல் செய்தது.

சூர்யா மண் மிதித்ததை ராஜலட்சுமியிடம் போட்டு கொடுத்த சித்ரா தேவி.. வெடித்த புது பிரச்சனை – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

3. பொன்னியின் செல்வன் 2: மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, சோபிதா, பிரகாஷ்ராஜ், லால் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்தனர். இப்படம் ரூபாய் 344 கோடி வசூல் பெற்றது.

4. வாரிசு: தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பேமிலி என்டர்டைன்மென்ட் படமாக வெளியான வாரிசு படம் ரூ.303 கோடி வசூல் செய்து நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

5. துணிவு: ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வந்த அஜித்தின் துணிவு திரைப்படத்தை எச் வினோத் இயக்க மஞ்சு வாரியார் ஜான் கொக்கேன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200.4 கோடி வசூல் பெற்றது.

6. வாத்தி: தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் இணைந்து நடித்த வாத்தி ரூ.118.2 இரண்டு கோடி வசூல் செய்தது.

7. மார்க் ஆண்டனி: எஸ்.ஜே சூர்யா, விஷாலின் மிரட்டலான நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் மொத்தமாக ரூபாய் 104.1 கோடி வசூல் பெற்றது.

மூன்று காமெடி பீஸ் நடிகர்கள் வில்லனாக நடித்த கதை தெரியுமா..

8. மாவீரன்: சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் மடோனா அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் ரூப.81.1 கோடி வசூல் செய்தது.

9. மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்கள் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் மாமன்னன் ரூ. 72 கோடி வசூல் செய்துள்ளது.

10. ஜிகர்தண்டா டபுள் X: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா அவர்களின் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் X திரைப்படம் ரூ.67.2 கோடி வசூலை பெற்று 10வது இடத்தை பிடித்துள்ளது.