அயலான் முதல் கேப்டன் மில்லர் வரை இந்த வாரம் OTT யில் வெளியாகும் திரைப்படங்கள்…

Tamil movies releasing this week in OTT: திரையரங்குகளில் வெளியாகும் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்வதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். முக்கியமாக தியேட்டர்களை விட ஓடிடியில் பார்க்கும் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் அயலான் முதல் கேப்டன் மில்லர் வரை எந்தெந்த படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

மேரி கிறிஸ்துமஸ்: இயக்குனர் ஸ்ரீ ராம் ராகவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இணைந்து  நடித்திருக்கும் மேரி கிறிஸ்மஸ் நெட்பிலிக்ஸ் தளத்தில் இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் விஜய் சேதுபதி காதல் ரொமான்ஸ் என பின்னிப் பெடல் எடுத்தார். இப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது.

குழந்தை, குட்டி, கணவன் என சந்தோஷமாக இருக்கும் திண்டுக்கல் சாரதி பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்..

மிஸ்ஸின்: சாப்டர் ஒன்: ஏ.எல் விஜய் இயக்கத்தில் லைகா புரோடக்ஷன் தயாரிப்பில் வெளியான மிஷன் சாப்டர் ஒன் திரைப்படத்தில் அருண் விஜய் எமி ஜாக்சன் இணைந்து நடித்தனர். ஆக்சன் திரில்லர் படமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவை விமர்சனம் கிடைத்தது. இப்படம் இந்த மாதம் இறுதியில் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் எந்த ஓடிடி என இன்னும் அறிவிக்கவில்லை.

அயலான்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திருக்கும் சிவகார்த்திகேயன் தற்பொழுது மேலும் உயர்ந்துள்ளார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் கடந்த அயலான் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. புதிய தொழில்நுட்ப முறையுடன் உருவான இப்படம் வித்தியாசமான ஏலியன்களை காட்டி பார்வையாளர்களை கவர்ந்தது. அயலான் படத்தை ரவிக்குமார் இயக்க சிவகார்த்திகேயன், யோகி பாபு இணைந்து நடித்தனர். அயலான் படமும் இந்த மாதம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

செத்தும் கெடுத்தா மேகனா.. மொத்த சொத்தும் போச்சு என கதறும் கலிவரதன் மற்றும் அர்ஜுன்..!

கேப்டன் மில்லர்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், அதிதி பாலன், சுந்தீப் கிஷன், ஜான் கொக்கேன் இணைந்து நடித்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்திற்கு கலவை விமர்சனம் கிடைத்த நிலையில் இப்படமும் இந்த மாதம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.