இந்த வருடம் வெளியாகி வசூலில் கல்லா கட்டிய டாப் 10 தமிழ் திரைப்படங்கள்.!

Box office collection: இந்த வருடம் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப் போட்டு வருகிறது. அப்படி பல திரைப்படங்கள் கலவை விமர்சனங்களை பெற்றாலும் கூட வசூலில் கல்லா கட்டியது தெலுங்கு திரைப்படங்கள் போலவே தமிழ் திரைப்படங்களும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்ய வேண்டும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. 

1000 கோடி இல்லை என்றாலும் 500 கோடிக்கும் மேலும் வசூல் செய்திருக்கிறது தமிழ் திரைப்படங்கள். இவ்வாறு தமிழில் இந்த வருடம் வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்த திரைப்படம் லியோ விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த மாதம் வெளியானது. தற்பொழுது வரையிலும் ரூபாய் 578 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த ஐஷு எங்களுக்கு வேண்டாம்… நிக்சனின் காதல் வலையில் சிக்கி சின்னா பின்னமாகும் தனது மகளுக்காக கதறும் ஐஷுவின் பெற்றோர்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் கலவை விமர்சனத்தை பெற்றாலும் உலகளவில் ரூ.625 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளியான வாரிசு மற்றும் துணிவு, வாத்தி ஆகிய பல திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் கிடைத்துள்ளது.

அதன்படி இலங்கை நாட்டின் பண மதிப்பை ஒப்பிட்டு தற்போது டாப் 10 திரைப்படங்களின் வசூலும் வெளியாகி உள்ளது. ரஜினியின் ஜெயிலர் ரூ.20 கோடி, விஜய்யின் லியோ ரூ.17.9 கோடி, விஜய்யின் வாரிசு ரூ.13 கோடி, மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன்  ரூ.12.6 கோடியாம்.

தீபாவளிக்கு வெளியான கார்த்தியின் 5 திரைப்படங்கள்.. விஜய் உடன் மோதிய கைதி

மேலும் அஜித்தின் துணிவு ரூ.6.6 கோடி, சிவகார்த்திகேயனின் மாவீரன் ரூ.3.6, கோடி தனுஷின் வாத்தி ரூ.3.4 கோடி, அட்லீ ஷாருக்கான் கூட்டணியில் உருவான ஜவான் ரூபாய் 3.4 கோடி, ஷாருக்கானின் பதான் ரூ.1.3 கோடி, சிம்புவின் பத்து தல ரூ.1.2 கோடி போன்ற வசூலை பெற்றுள்ளது.