கட்சி ஆரம்பிக்கிறேன் என ஆரம்பிச்சி தடம் தெரியாமல் போன 9 தமிழ் நடிகர்கள்..?

Tamil Actors Who Failed In Politics: தமிழ் சினிமாவில் இருந்து எப்பொழுதுமே அரசியலை தானாக பிரித்து விட முடியாது சினிமாவில் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பது இங்கு எழுதப்படாத ஒரு நியதியாக உள்ளது. ரசிகர்களின் ஆதரவை நம்பி கட்சி ஆரம்பித்தவர்கள் அதிகம் அதில் எம்ஜிஆர் தவிர வேறு யாருமே பெரிதாக வெற்றியை பார்க்கவில்லை. அப்படி இதுவரை தமிழகத்தில் சொந்த கட்சி ஆரம்பித்தவர்கள் 11 பேர் அதில் 9 பேர் அரசியலில் மண்ணை கவி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இதுவரையிலும் தமிழகத்தில் கட்சி ஆரம்பித்த அந்த 11 நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

எம்ஜிஆர்: திமுக கட்சிக்கு ஆதரவாக இருந்த எம்ஜிஆர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கருணாநிதியின் மீது ஏற்பட்ட அதிர்ப்தியால் எம்ஜிஆர் ஆரம்பித்த சொந்த கட்சி தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டு இந்த கட்சியை ஆரம்பித்தார். அதிலிருந்து இவர் இறக்கும் வரை அந்த கட்சி வெற்றியை மட்டுமே பார்த்தது.

அர்ஜுனுக்கு செருப்பால் அடித்தது போல் பதிலடி கொடுத்த தமிழ்.. கண்கலங்கி நிற்கும் கார்த்தி… தமிழும் சரஸ்வதியும்..

சிவாஜி: நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் கட்சி ஆரம்பித்தது பலருக்கும் தெரியாது 1989ஆம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சி வெற்றி பெறவில்லை தற்பொழுது இந்த கட்சி இருக்கும் இடம் கூட தெரியாமல் போய்விட்டது.

பாக்கியராஜ்: நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் எம்ஜிஆரின் பக்தனாக இருந்தது அனைவருக்கும் தெரியும் எம்ஜிஆருக்கும் பாக்கியராஜை மிகவும் பிடிக்கும். 1989ஆம் ஆண்டு பாக்கியராஜ் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி ஆரம்பித்தார் தற்பொழுது அதுவும் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

டி ராஜேந்தர்: பன்முகத் திறமைகளை கொண்ட கலைஞராக விளங்கும் டி ராஜேந்தர் 1991ஆம் ஆண்டு தாயகம் மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சியும் பெரிதாக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த்: கேப்டன் விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை உருவாக்கினார். மிகக் குறுகிய காலத்திலேயே சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மாறினார் சரியான நேரத்தில் உடல்நிலை சீராக இருந்திருந்தால் முதலமைச்சராக கூட வாய்ப்பு இருந்திருக்கும் ஆனால் உடல்நிலை காரணமாக அவருடைய கட்சி தோல்வி அடைந்தது அவரும் தற்போது நம்முடன் இல்லை.

சரத்குமார்: நடிகர் சரத்குமார் 2007ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது மேலும் தென்காசி சட்டமன்ற தொகுதியில் சரத்குமார் செல்வாக்கு மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்பொழுது இந்த கட்சி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை.

ரவுடி கும்பலுக்கு சுத்து போடும் சூர்யா மற்றும் பிரபா!!! கௌதம் சிக்குவாரா? பரபரப்பாக ஆஹா கல்யாணம்.

கார்த்திக்: நடிகர் கார்த்திக் 2009ஆம் ஆண்டு நாடாளு மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார் இந்த கட்சி அவருக்கு பெரிதாக பெயர் வாங்கி கொடுக்கவில்லை. குறிப்பாக அது ஜாதியை சேர்ந்த கட்சியாக அடையாளப்படுத்தியது தான் தோல்விக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

கருணாஸ்: நடிகர் கருணாஸ் 2011ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில் ஆரம்பித்தார் இது குறிப்பிட்ட சாதி முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி என கூறப்பட்டது. கருணாஸ் இதனை ஒரு பொழுதும் மறுத்தது கிடையாது தற்போது இந்த கட்சி எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

கமல்ஹாசன்: நடிகர் கமலஹாசன் படம் 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் கட்சியை தொடங்கினார் பிக் பாஸ் தனக்கு கிடைத்த ஆதரவை வைத்து தான் இந்த கட்சி தொடங்கியதாக கூறப்படுகிறது. தன்னை அரசியல்வாதி என வீர வசனம் எல்லாம் பேசி இருந்தாலும் இவர் திமுகவுடன் சுற்றித் திரிவதை ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

மன்சூர் அலிகான்: தனது வித்தியாசமான பேச்சியினால் எப்பொழுதுமே சிக்கலில் சிக்கி கொள்பவர் தான் நடிகர் மன்சூர் அலிகான். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கினார் தற்பொழுது இந்த கட்சி காணாமல் போய்விட்டது.

விஜய்: கடைசியாக தளபதி விஜய் தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக இருக்கும் தளபதி விஜய் இன்று தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். இந்த கட்சி தொடங்கியதோடு மட்டுமல்லாமல் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சந்திக்க இருப்பதாகவும் இதனால் சினிமாவில் இருந்த விலங்குவதாகவும் தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இவருடைய அதிரடியான அறிவிப்புகளால் இவரது அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கப்போகிறது என மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.