eramana-rojave

தனி குடுத்தனம் வர மறுத்த ஜீவாவிற்கு ட்விஸ்ட் வைத்த பிரியா.. வைரல் ப்ரோமோ

விஜய் டிவி ஒளிபரப்பாக வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து பல திருப்பங்களுடன் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் முக்கியமான செய்திகள் தான் ஈரமான ரோஜாவே 2. இந்த சீரியலில் மொத்த குடும்பத்தையும் பிரித்து தவிக்க விட வேண்டும் என்பதற்காக தேவி பல முயற்சிகளை செய்து வருகிறார்.

அப்படி முதல் கட்டமாக பிரியாவின் பலவீனத்தை பகடைக்காயாக வைத்துக்கொண்டு ஜீவாவை தனி குடுத்தனம் அழைத்து செல்வதற்காக தொடர்ந்து அறிவுரை கூறிய வருகிறார். அதாவது ஜீவா காவியா இருவரும் காதலித்து வந்த நிலையில் இதனைப் பற்றி தெரிந்த பிறகு தற்பொழுது வரையிலும் பிரியா ஜீவாவை ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வருகிறார்.

அப்படியே ஏற்றுக்கொள்ள முயற்சித்தாலும் சில பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது எனவே வேறு வழியில்லாமல் பிரியா ஜீவாவை தனியாக அழைத்துச் செல்ல வேண்டும் என விரும்புகிறார். எனவே பிரியா இதனை பற்றி ஜீவாவிடம் கூற முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

மேலும் பிரியா காவியாவிடம் ஜீவாவை அழைத்துக்கொண்டு தனி குடுத்தனம் செல்ல இருப்பதாக சொல்ல அவரும் மறுத்து விட இறுதியாக தனது மாமனார் மாமியாரிடம் கூறுகிறார். அவர்களும் தனது மகனை என்னிடமிருந்து பிரித்து விடாத மா என கெஞ்சுகிறார்கள். ஆனால் காதலித்த இருவரும் ஒரே வீட்டில் இருப்பது எனக்கு கொஞ்சம் நெருடலாக இருக்கு என்னை மன்னித்து விடுங்கள் என சொல்கிறார்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தனி குடுத்தனம் போக வேண்டும் என பிரியா சொல்ல அதற்கு ஜீவா எங்க அம்மா அப்பாவை விட்டுட்டு என்னால் வர முடியாது என சொல்ல அதற்கு அப்ப நான் நானும் சொல்றேன் நீங்க வரலைன்னா நான் தனியா வீடு ஒன்றை எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருப்பேன் என சொல்ல இந்த நேரத்தில் தேவி கைத்தட்டி நீ சரியான முடிவு எடுத்திருக்க நீ எடுத்தது தான் சரி என சொல்ல ஜீவா தேவியை முறைக்கிறார் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

baakiya-lakshmi

வீட்டையும் எழுதி வாங்கிக்கொண்டு புலம்பவிட்ட பாக்கியா.! வெளியே நின்று வீட்டை பார்த்த கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி ..ப்ரோமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் வாரம் தோறும் டிஆர்பியில் முதல் ஐந்து இடங்களை பிடித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கோபி ராதிகாவிற்கு டுவிஸ்ட் வைக்கும் வகையில் பாக்யா போட்ட சவாலில் ஜெய்த்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ராதிகா கோபியை அழைத்துக்கொண்டு பாக்யாவின் வீட்டில் குடியேறுகிறார். தொடர்ந்து இவர்களுக்கிடையே மிகப்பெரிய சண்டைகள் ஏற்பட ஒரு கட்டத்தில் ஈஸ்வரியை வா போ என மரியாதை இல்லாமல் ராதிகா திட்டி விடுகிறார். எனவே பாக்கியா இதனைப் பற்றி கோபியிடம் கூற ராதிகாவை திட்டுவதற்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை என சொல்கிறார்.

எனவே இதனால் உங்களுக்கு தர வேண்டிய மீதி 18 லட்சம் ரூபாய் பணத்தை தந்துவிட்டால் வீட்டை காலி செய்து விட வேண்டும் என சொல்ல அதற்கு கோபியும் சரி என ஒப்புக்கொள்கிறார். இவ்வாறு பாக்கியா சபதம் போட்டது போலவே ஒரு மாதத்தில் 18 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்து கோபியின் கையில் ஒப்படைக்கிறார். இதனால் இந்த வீட்டை விட்டு வெளியேற கோபி தயங்க ஆனால் ராதிகா இதற்கு மேல் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என தங்களுடைய பொட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு கிளம்புகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு செல்கிறார்கள். அங்கு வீட்டை பாக்யாவிற்கு எழுதிக் கொடுக்க கோபி தயங்க ராமமூர்த்தி அதுதான் பணம் வாங்கிட்டில கையெழுத்தை போடு என சொல்ல பிறகு கோபியும் கையெழுத்து போடுகிறார். வெளியில் வந்தவுடன் இதற்கு மேல் அந்த வீட்டிற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் உரிமையும் கிடையாது என கூறுகின்றார்.

பிறர் அனைவரும் வீட்டிற்கு வந்தவுடன் ஏழில் பாக்யா பெயர் போட்ட பலகையை வீட்டிற்கு முன்பு வைக்க இதனை எதார்த்தமாக நடந்து வரும் பொழுது பார்க்கும் கோபி, ராதிகா இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

pandiyan-stores

ஜெயிலில் இருக்கும் கண்ணன்.. ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்தது.! என்ன குழந்தை தெரியுமா பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரொமோ வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் கண்ணன் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்ட நிலையில் எப்படியாவது இவரை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தில் இருப்பவர்கள் போராடி வருகின்றனர்.

தனம் தனக்கு இருக்கும் பிரச்சனைகளை மறைத்து தனது கடமைகளை செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யாவின் வளைகாப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது இதனை அடுத்து ஏற்கனவே கண்ணன் லஞ்சம் வாங்கிய விஷயம் மேல் அதிகாரிக்கு தெரிய வர அவர் எப்படியாவது கண்ணனை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்.

அந்த வகையில் லஞ்ச ஊழியர்களிடம் கண்ணனை பற்றி கூற அவர்களும் கண்ணனை அரெஸ்ட் செய்து விடுகிறார்கள். இதனால் ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருந்து வரும் நிலையில் கண்ணனை எப்படியாவது வீட்டிற்கு அழைத்து வர சொல்லி ஐஸ்வர்யா கெஞ்சுகிறார். இந்த நிலையில் கதிர் எவ்வளவு போராடியும் கணனை வீட்டிற்க்கு அழைத்து வர முடியவில்லை எனவே கதிர் வந்தவுடன் அவரை அழைத்து வந்துட்டீங்களா மாமா என ஐஸ்வர்யா கேட்க அதற்கு கண்ணன் இடத்திலிருந்து தான் படத்தை எடுத்து இருக்காங்க என சொல்கிறார்.

கண்ணன் வேண்டும் என்றே தான் பணத்தை வாங்கி இருக்கான்  ஜெயிலில் கிடக்கட்டும் எனக் கூற ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி ஏற்படுகிறது எனவே அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல பிறகு பெண் குழந்தையும் பிறந்து விடுகிறது. எனவே இதனை பார்க்க வந்த மூர்த்தியிடம் ஐஸ்வர்யா நாங்கள் பண்ணுனது தப்புதான் மாமா என மன்னிப்பு கேட்க அவன் பண்ணுன தப்புக்கு நீ என்னமா பண்ணுவ என்னதான் இருந்தாலும் உன்னையும் குழந்தையையும் பார்க்கிறது எங்க கடமை என கூற இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.