எவ்வளவு சொல்லியும் அம்மா பேச்சை கேட்காமல் கண்ணம்மா கழுத்தில் தாலி கட்டிய பாரதி.! அதிர்ச்சியில் சௌந்தர்யா..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் முதல் சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து பாரதி கண்ணம்மா 2 கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் இருந்து சற்று வேறுபட்ட கதை அம்சத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் பாரதி என்ற கேரக்டரில் அருணுக்கு பதிலாக சிப்பு சூர்யா ஹீரோவாக நடித்து வருகிறார்.

அதேபோல் கண்ணம்மா கேரக்டரில் முதல் சீசனில் நடித்த அதே வினோஷா தேவி தான் நடித்து வருகிறார். இவரை அடுத்து பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பித்ததில் இருந்து இரண்டாவது சீசன் வரையிலும் வில்லி கேரக்டரில் வெண்பாவாக ஃபரீனா நடித்து வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. முதல் பாகத்தில் எந்த அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்தாரோ அதேபோல் இந்த சீசனிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் வில்லி வெண்பாவிற்கு ஹீரோ பாரதிக்கும் திருமணம் செய்து வைக்க பாரதியின் அம்மா சௌந்தர்யா முடிவு செய்திருக்கிறார் இவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்ற முடிந்துவிட்டது இதனால் பாரதியின் காதலி கண்ணம்மா மணமடைந்து போயிருக்கும் நிலையில் பாரதியிடம் இருந்து சற்று விலகியே இருக்கிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கண்ணம்மாவை கோவிலில் வைத்து தனது தாய்க்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள பாரதி முடிவெடுக்கிறார். எனவே கண்ணம்மாவை கோவிலுக்கு அழைத்து வந்து பல பிரச்சனைகளுக்கு இடையே தனது தாயை எதிர்த்து கண்ணம்மாவின் கழுத்தில் தாலி கட்டு விடுகிறார். இதனை பார்த்த பாரதியின் தாய் மற்றும் மில்லி வெண்பா என குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சடைகின்றனர்.

தனது பேச்சை மீறி கண்ணம்மாவை பாரதி திருமணம் செய்துக் கொண்டதால் சௌந்தர்யா என்ன செய்யப் போகிறார் இனி பாரதி, கண்ணம்மா இதனால் எவ்வளவு பிரச்சனைகளை அனுபவிக்க போகிறார்கள் என்பதை வைத்து இனி வரும் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment