shortflim-tamil360

கொஞ்சம் கொரோனா நிறைய காதல் டீசர் வெளியீடு.!!

Konjam corona niraya kathal teaser:bஉலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினால் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் வீட்டிலேயே முடங்கியுள்ள நடிகர், நடிகைகள் அவ்வப்போது தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் பாக்யராஜின் மகனான சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி இருவரும் அவ்வப்போது தனது சமூக வலைத்தளபக்கங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.மேலும் இவர்கள் ரொமான்டிக்காக நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். இதனால் சிங்கிள்ஸ் இவர்களது வீடியோவை பார்த்து பதறினார்கள்.

இதை தொடர்ந்து அன்னையர் தினத்தன்று இவர்கள் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தனர். அதில் முதல் வீடியோவாக தங்களது அம்மக்களிடம் பேட்டி எடுத்து போட்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது இவர்கள் வீட்டில் இருந்தபடியே கொஞ்சம் கொரோனா நிறைய காதல் என்ற ஷாட் பிலிம் எடுத்து உள்ளனர். அந்த ஷார்ட் பிலிமின் டீஸாரை தற்போது தனது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது கொஞ்சம் கொரோனா நிறைய காதல் டீசர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த டீசர்.

 

trisha_tamil360newz

திரிஷா நடித்திருக்கும் கார்த்திக் டயல் செய்த எண் டீசர் இதோ.!

தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கும் மேல் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அனைத்து முன்னனி நடிகர்களுடன் நடித்து சினிமா துறையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் என்பதை அனைவரும் அறிந்ததே.

கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர், நடிகைகள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் அவர்களுக்கு போர் அடிக்காமல் இருப்பதற்காக சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அந்த வகையில் நடிகை திரிஷா தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கார்த்தி டயல் செய்த எண் என்ற ஷார்ட் பிலிமில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து கொண்டே நடிகை த்ரிஷா இந்த ஷாட் பிலிமில் நடித்துள்ளார். இதனை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த குறும்படத்திற்கு கிடைத்த ஆதரவை பார்த்து நடிகை திரிஷா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

நடிகை திரிஷா இந்த சாட்பிலிமிர்க்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க வில்லை என்றும் ஆதரவுக்கு நன்றி எனவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஷாட் பிலிமின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

தற்போது அந்த டீசர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

aaraa

ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் ‘ஆரா’ குறும்படம் பாராட்டு மழையில் இயக்குனர்.!

ஆரா குறும்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது, தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்து விட்ட இந்த காலத்தில் எப்படி எல்லாம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், இது போலவும் ஏமாற்றமுடியுமா என்று கேட்கும் அளவிற்கு பல கொள்ளைகள்  நடைபெற்றுள்ளன.

அந்த வகையில் இயக்குனர் ஜி ராஜ்குமார் அவர்கள் ஆரா  என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்தின் திரைக்கதை விருவிருப்பாக செல்கிறது இந்த குறும்படத்தில் பிரபல தொகுப்பாளினி ஆர்த்தி சுபாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் பிரித்வி ராஜ், சிவா, சுரேஷ், கார்த்திக், சந்தோஷ், மோனிகா, அகன்ஷா ஆயர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். இந்த திரைப்படத்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கதாநாயகன், கதாநாயகி ஆர்த்தி சுபாஷ் காதலித்து வருகிறார்.

aarthi-subash
aarthi-subash

ஒரு கால கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள் ஒருநாள் காதலியுடன் கடற்கரைக்கு காத்தால பேசிக்கொண்டிருக்கிறார், பின்பு வீட்டுக்கு திரும்பும் பொழுது கதாநாயகியின் காலடி மண்ணை ஒரு மர்ம நபர் எந்த எடுத்து செல்கிறார் அதன் பிறகு என்ன ஆனது? ஹீரோயினும் ஹீரோவும் எப்படி சந்தித்துக்கொண்டார்கள்? எப்படி காதல் வயப்பட்டார்? என்பதை கூறுவதே இந்த திரைப்படத்தின் கதை அதுமட்டுமில்லாமல் படத்தை தில்லுமுல்லு வேலைகளை தெளிவாக படம் போட்டு காட்டி உள்ளார்கள் இயக்குனர் ராம்குமார்.

https://youtu.be/_AacIVjNprY

avan peyar amutha trailer

பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கும் திருநங்கையை மையபடுத்தி எடுத்த கதை அவன் பெயர் அமுதா ட்ரைலர் இதோ.!

உதயா மோகன் இயக்கத்தில், CROWD FUNDING முறையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அவன் பெயர் அமுதா’.இந்த திரைப்படம் திருநங்கையை மைய படுத்தி, சில திருப்பு முனைகளுடன் உருவாகி உள்ளது.

மேலும் படத்தில் தாணு, நிவேதா,அஞ்சனா, கவின் ஆகியோர்கள் நடித்து உள்ளனர்.கேமரா மேனாக சூர்யா பணியாற்றியுள்ளார், படத்தின் எடிட்டராக ஈஸ்வரமூர்த்தி, இசையமைப்பாளராக அசாருதின் பணியாற்றியுள்ளார்.

இந்த திரைப்படம் ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை 6 மணிக்கு RAINBOW CHANNEL எனும் யூடியூப் சேனலில் வெளியாக உள்ளது.

https://youtu.be/-MIONusbTNQ