reshma-90

சரங்க தரியா என்ற பாடலுக்கு தாறுமாறாக சரி குத்தாட்டம் போட்ட ரேஷ்மா.! வைரலாகும் வீடியோ

விஷ்ணு விஷால் மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர்களின் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் தான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன். இத்திரைப்படம் முழுவதும் காமெடி நிறைந்த கலாட்டா திரைப்படமாக அமைந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.அதோடு முக்கியமாக இத்திரைப்படத்தில் சூரி மற்றும் புஷ்பா கேரக்டரில் நடித்து வந்த ரேஷ்மா இவர்கள் இருவரும் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்கள்.

அந்தவகையில் இத்திரைப்படத்தை இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் என்ற காமெடி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி பிரபலமடைந்த அவர்தான் ரேஷ்மா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் இவர் சுமார் 42 நாட்கள் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்தாலும் ஓரளவிற்கு பிரபலமடைந்தார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு சின்னத்திரையிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலை தொடர்ந்து கண்ணான கண்ணே சீரியலிலும் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது சன் டிவியையும் தாண்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் வேலம்மாள் தொடரில் நாக்குவல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்பொழுது சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்தவர் இவர்  லவ் ஸ்டோரி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சரங்க தரியா என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு செய்யவும்.