பாக்யாவை வீழ்த்திய சந்தோஷத்தில் தாவணி பாவாடையில் புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா.!

Baakiyalakshmi : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இவர் பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கு இரண்டாவது மனைவியாக நடித்து வருகிறார்.

சமீபத்திய எபிசோடில் பாக்கியா கேன்டீன் வாய்ப்பு வேண்டுமென்றால் ஆஃபீஸில் உள்ளவர்கள் ஓட்டு போட்டால் உங்களுக்கு மீண்டும் கேண்டின் வாய்ப்பை தருகிறேன் என ராதிகா கூறி இருந்தார் ஆனால் ஓட்டு எண்ணிக்கை படி பாக்யா கேண்டின் வாய்ப்பை இழந்துவிட்டார் இதனால் ராதிகா மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

ரேஷ்மா பசுபுலேட்டி 2015 ஆம் ஆண்டு மசாலா என்ற திரைப்படம் தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இதனை தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் கோ 2, மணல் கயிறு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்த ரேஷ்மா திரைக்கு வராத கதை, வணக்கம்டா மாப்பிள்ளை ஆகிய திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

Reshma Pasupuleti
Reshma Pasupuleti

கடைசியாக இவர் ஹைவே என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பு வம்சம் என்ற சீரியலில் சின்னத்திரையில் கால் தடத்தை பதித்து வாணி ராணி, மரகதவினை, ஆண்டாள் அழகர், உயிர் மெய், என் இனிய தோழன், அன்பே வா, ஆகிய சீரியல்களும் நடித்துள்ளார்.

Reshma Pasupuleti
Reshma Pasupuleti

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவிடம் அடிக்கடி தோத்து போய் பல்பு வாங்கிக் கொண்டு இருப்பார் ஆனால் முதன்முறையாக பாக்யாவை கேண்டினை விட்டு ராதிகா துரத்தியுள்ளார் இந்த நிலையில் தாவணி புடவையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பாக்யாவை ஜெயித்து விட்டோம் என்ற மிதப்பில் இதுபோல் புகைப்படத்தை வெளியிடுகிறீர்களா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Reshma Pasupuleti
Reshma Pasupuleti
Reshma Pasupuleti
Reshma Pasupuleti