Yuvan Shankar Raja “ya nabi” video song goes viral: யுவன் ஷங்கர் ராஜா இவர் இசைக் கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான இளையராஜாவின் மூன்றாவது மகன் என்பது அனைவரும் அரிந்ததே. யுவன் சங்கர் ராஜா அவர்களும் திரைப்பட இசை கலைஞர், பின்னணி பாடகர், ஆசிரியர் என பன்முக திறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தான் தமிழ்நாட்டில் முதன் முதலில் ரீமிக்ஸ் கலாச்சாரத்தை தொடங்கி பிரபலப் படுத்தியவர்.
இவர் ராம் திரைப்படத்திற்காக 2006இல் சைபர்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதைப் பெற்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவரின் ரசிகர் பட்டாளம் இவருக்கு “யூத் ஐகான்” என்ற பட்டத்தை கொடுத்தனர். இவர் 1996ஆம் ஆண்டு தனது 16 வயதில் அரவிந்தன் என்ற திரைப்படத்திற்காக முதல் முதலில் இசை அமைக்கதொடங்கினார். ஆனால் அந்தப்ப்படம் அந்தளவுக்கு பிரபலமாகவில்லை.
மேலும் இவர் 2001 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். மேலும் இதனைத்தொடர்ந்து இவர் துள்ளுவதோ இளமை, நந்தா மௌனம் பேசியதே, காதல்கொண்டேன், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், பேரழகன், செவன் ஜி ரெயின்போ காலனி, மன்மதன், அறிந்தும் அறியாமலும் என பல நடுத்தர படங்களிலும் மாரி 2, கழுகு 2, என்ஜிகே, நேர்கொண்டபார்வை, சிந்துபாத், ஹீரோ போன்ற பல புது படங்களிலும் இசையமைத்து உள்ளார்.
தற்போது முஸ்லிம்களின் புனித பண்டிகையான ரமலான் பண்டிகை தொடங்கியுள்ளது. கரோனா வைரஸ் காரணமாக தற்போது இஸ்லாமியர்கள் வீட்டிலிருந்தபடியே நோன்பை கடைபிடித்து வருகின்றனர். எனவே ரமலான் பண்டிகைக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் “யா நபி” என்ற 4 நிமிட பாடலை வெளியிட்டுள்ளார்.
எனவே ஏ ஆர் ரகுமான் அவர்கள் இந்தப் பாடல் குறித்து கூறியதாவது. யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைத்து பாடிய “யா நபி” என்ற புகழ் மாலையை கேட்டு மகிழுங்கள் என்று கூறியுள்ளார். யுவன் சங்கர் ராஜா அவர்கள் ரமலான் பண்டிகையை ஒட்டி பாடிய இந்த பாடலுக்காக ரசிகர்கள் மற்றும் திரைதுறையினர் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த பாடல் யூடியூபில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இதோ அந்த வீடியோ.