இளையராஜா வீட்டில் எடுபுடி வேலை செய்தவர்தான் இந்த மெஹா ஹிட் திரைப்படத்திற்கு இசையமைத்தவர்.! அட, இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே…

வெறும் 85 ரூபாய் உடன் சென்னைக்கு வந்து இளையராஜாவின் அலுவலகத்தில் சின்ன சின்ன வேலைகளை செய்து அவரிடமிருந்து இசைகளை கற்றுக்கொண்டு இதன் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராக மாறியவர்தான் இசையமைப்பாளர் பரணி. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இசையமைப்பாளர் பரணி தனது சிறு வயதிலேயே வீட்டை விட்டு சென்னை வந்துள்ளார்.

இவர் சென்னைக்கு வரும்பொழுது வெறும் 85 ரூபாய் மட்டும் தான் வைத்திருந்தாராம். எனவே என்ன செய்வதென்று தெரியாமல் சில நாட்கள் பிளாட்பார்மில் படுத்து அங்கேயே தங்கி வந்துள்ளார். இந்த நேரத்தில் ஒருவரின் பழக்கம் காரணமாக டீக்கடையில் வேலை செய்வதற்கான வாய்ப்பைப் பெற்று அங்கே வேலை பார்த்து வந்தாராம்.

இளையராஜாவை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என பரணி முயற்சி செய்து வந்துள்ளார். அப்படி ஒரு மாதம் கழித்து இளையராஜாவின் வீட்டில் காத்திருந்த நிலையில் தான் அவருக்கு இளையராஜா வீட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இளையராஜா அலுவலகத்தில் முதலில் எடுபிடி வேலை பார்த்து வந்த இவர் அங்கு இளையராஜா இசையமைப்பது, கம்போஸ் செய்வது, பாடல் எழுவது ஆகியவற்றை கூர்ந்து கவனித்திருக்கிறார்.

அப்பொழுது தனக்கும் பாடல் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதனால் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் இளையராஜாவிடம் வேலை பார்த்த நிலையில் பிறகு எஸ்.ஏ சந்திரசேகர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இதன் மூலம் விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு என்ற படத்தில் இரண்டு பாடல்களை எழுத பரணிக்கு எஸ்.ஏ சந்திரசேகர் வாய்ப்பு கொடுத்தாராம். இவ்வாறு இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் மட்டுமல்லாமல் கதையும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இவ்வாறு இதன் பிறகும் இளையராஜாவிடம் வேலை பார்த்து வந்த பரணி எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான பெரியண்ணா என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவருடைய உண்மையான பெயர் குணசேகரன் படத்திற்காக தனது பெயரை பரணி என எஸ்.ஏ சந்திரசேகர் மாற்றி வைத்தாராம். பெரியண்ணா படத்தில் இடம்பெற்றிருந்த ‘நிலவே நிலவே’ பாடல் சூப்பர் ஹிட் பெற்றது.

இதனை அடுத்து ‘பார்வை ஒன்றே’ போதும் என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். அதன் பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். அப்படி தற்பொழுது வரையிலும் 30 பாடல்களுக்கு மேல் பரணி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment