dhanush

முதன்முறையாக வெளியான தனுஷ் கட்டிய பிரம்மாண்டமான வீட்டின் ஹோம் டூர் வீடியோ.! வாயடைத்துப் போன ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து தற்போது சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் பல விமர்சனங்கள் இருக்கு பிறகு படிப்படியாக சினிமாவில் வளர்ந்து தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் நடிகர் தனுஷ்க்கு பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என பல திரைவுலகிலும் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றியினை பெற்ற திரைப்படங்கள் தான் திருஞ்சிற்றம்பலம், நானே வருவேன் இந்த படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து தற்பொழுது இவர் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினியை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் இவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தனுஷ் சமீபத்தில் போயஸ் கார்டனில் மிகவும் பிரம்மாண்டமாக வீடு கட்டிய நிலையில் அங்கு குடியேறினார். மேலும் தற்போது அந்த வீட்டின் உட்புறம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது என்பது குறித்த தனுஷின் புதிய பிரம்மாண்ட வீட்டின் ஹோம் டூர் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷின் ரசிகர் ஒருவர் இந்த வீட்டினை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

வீடியோவை பார்க்க இந்த கிளிக் செய்யவும்..